கைவசம் ஏகப்பட்ட படங்கள்!.. பக்கா ஸ்கெட்ச் போடும் பிரதீப்.. தனுஷை விட பிஸியா இருக்காரே!..

by ramya suresh |
கைவசம் ஏகப்பட்ட படங்கள்!.. பக்கா ஸ்கெட்ச் போடும் பிரதீப்.. தனுஷை விட பிஸியா இருக்காரே!..
X

Pradeep Ranganathan: தமிழ் சினிமாவில் முதலில் குறும்படங்களை இயக்கி பிரபலமான பிரதீப் ரங்கநாதன் பின்னர் கோமாளி என்கின்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரவி மோகன், காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு லவ் டுடே என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மூலமாக இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பிரபலமானார் பிரதீப் ரங்கநாதன்.

பிரதீப் லைன் அப்: லவ் டுடே திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.

இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார் பிரதீப் ரங்கநாதன்.

டிராகன் ரிலீஸ்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டிராகன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் டீசர், பாடல் மற்றும் டிரைலர் அனைத்துமே வெளியாகி ரசிகர்களையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. நிச்சயம் லவ் டுடே திரைப்படத்தை போல இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் பிளான்: சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துவரும் பிரதீப் ரங்கநாதன் கைவசம் மூன்று திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இதில் டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் நிலையில் அடுத்ததாக இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இது இல்லாமல் சொந்தமாக ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும், படத்தில் நடித்து வருவதால் அதை முடிப்பதற்கு நேரம் எடுப்பதாக கூறியிருந்தார். ஒருவேளை தான் கமிட் செய்திருக்கும் படங்களுக்குப் பிறகு தனக்கு எந்த பட வாய்ப்பு வரவில்லை என்றால் நிச்சயம் தான் எழுதி வைத்திருக்கும் கதையை படமாக்குவேன். ஒருவேளை அடுத்தடுத்து பட வாய்ப்பு வரும் பட்சத்தில் தொடர்ந்து நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

Next Story