இது சுறா பார்ட் 2 மாதிரி இருக்குடா!.. என்னடா உன் டேஸ்ட்டு!. விஜயை கலாய்த்த லவ் டுடே பிரதீப்!..

by சிவா |
இது சுறா பார்ட் 2 மாதிரி இருக்குடா!.. என்னடா உன் டேஸ்ட்டு!. விஜயை கலாய்த்த லவ் டுடே பிரதீப்!..
X

Pradeep Ranganathan: கோமாளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன் குறும்படங்களை இயக்கி வந்தார். சரியான ரீச் கிடைக்கவில்லை. அப்போது டிவிட்டரில் பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் டேக் செய்து 'என் குறும்படம் தொடர்பான டிவிட்டை ரீடிவிட் செய்யுங்கள்' என கெஞ்சி கேட்டார். ஆனால், யாருமே அதை செய்யவில்லை.

கோமாளி: அதன்பின் சினிமாவுக்காக ஒரு கதை எழுதி சில நடிகர்களிடம் கதை சொன்னார். யாரும் நடிக்க முன்வரவில்லை. சிலருக்கு கதை பிடித்திருந்தாலும் பிரதீப்பை யாரும் நம்பவில்லை. ஜெயம் ரவிக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், பிரதீப்பின் மீது நம்பிக்கை இல்லாததால் ஒரு காட்சியை எடுத்து காட்டும்படி சொல்ல பிரதீப்பும் அப்படியே செய்தார். அதன்பின்னரே அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்.

பிரதீப் சம்பளம்: அப்படி உருவான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லவ் டுடே என்கிற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்தார் பிரதீப். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்கிய பிரதீப் இப்போது 15 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். அதோடு, தான் இயக்கும் படங்களில் நாமே ஹீரோ என்றும் முடிவெடுத்திருக்கிறார்.

டிராகன்: இந்த படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற படத்திலும், ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். எல்.ஐ.கே படம் பாதியில் நிற்கிறது. ஆனால், டிராகன் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

விஜய் பட வாய்ப்பு: கோமாளி படத்தை எடுப்பதற்கு முன் டிவிட்டரில் பலரையும் கலாய்த்துக்கொண்டிருந்தார் பிரதீப் ரங்கநாதன். விஜயின் ஜில்லா படம் வெளியான போது அப்படத்தை பார்த்துவிட்டு யுடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ‘சமீபத்தில் வந்த திரைப்படங்களில் சிறந்த டப்பிங்.. நிறைய மாடுலேஷன்ஸ்’ என பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதீப் வெங்கடேஷன் ‘அடப்பாவி.. சுறா பார்ட் டூ மாதிரி டப்பிங் இருந்துச்சிடா.. உன் ரசனையோட குவாலிட்டி என்னன்னு எனக்கு தெரியும் சுறா ஃபேன்’ என நக்கலடித்திருந்தார். தற்போது அந்த ஸ்கீரின்ஷாட்டை எடுத்து சிலர் டிவிட்டாரில் பகிர அது வைரலாகி வருகிறது.

லவ் டுடே ஹிட்டுக்கு பின் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ஆனால், நான் இயக்கும் படத்தில் நானே ஹீரோவாக நடிப்பேன் என சொல்லி விஜய் பட வாய்ப்பையே மறுத்தவர்தான் பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story