தலைவர் செய்த சிகரெட் ஸ்டைலில் நான் காலி!.. ரங்கநாதன் போட்ட டிவிட்!...

Pradeep Ranganathan: சில குறும்படங்களை இயக்கிவிட்டு சினிமாவுக்கு வந்தவர் பிரதீப் ரங்கநாதன். சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட பிரதீப் அதற்காக பல முயற்சிகளை செய்தார். ஆனால், யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. தான் இயக்கிய குறும்படங்களை புரமோட் செய்யும்படியும் ஒரு டிவிட் போட சொல்லியும் பிரேம்ஜி உள்ளிட பலரிடமும் கெஞ்சினார்.
ஆனால், யாருக்கும் அவருக்கு உதவ முன்வரவில்லை. நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் இவர். ரஜினி படங்களை பார்த்து வளர்ந்தவர் இவர். ஒரு கதையை உருவாக்கி பலரிடமும் சென்று கதை சொன்னார். ஆனால், இவரின் இயக்கத்தில் யாரும் நடிக்க முன்வரவில்லை. ஒருவழியாக ஜெயம் ரவியை சம்மதிக்க வைத்து கோமாளி படத்தை இயக்கினார்.
அந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவே ரசிகர்களிடம் நடிகராக பிரபலமானார். லவ் டுடே படம் தெலுங்கிலும் ஹிட் அடித்தது. இப்போது டிராகன் படம் வெளியாகி வசூலில் சக்கை போட்டு போட்டு வருகிறது. 100 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்திருக்கிறது.
இந்த படத்தை ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படம் ஹிட் அடிக்கவே படக்குழு ஊர் ஊராக போய் நன்றி சொல்லி வருகின்றனர். இந்நிலையில்தான், டிராகன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினியே படக்குழுவே நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் அவரை சென்று பார்த்தனர். அப்போது படத்தை பற்றி பாராட்டி அவர்களிடம் ரஜின் பேசியிருக்கிறார். இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை அஸ்வத் மாரிமுத்துவும், பிரதீப் ரங்கநாதனும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் டிவிட்டரில் ‘தலைவர் செய்து காட்டிய சிகரெட் ஸ்டைலில் நான் காலி’ என பதிவிட்டிருக்கிறார். ஏற்கனவே கனவு நிறைவேறிவிட்டது என அஸ்வத்தும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.