தனுஷ் போல இருப்பது பிளஸ்ஸா மைனஸா?!.. பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில்!..

Pradeep Ranganathan: கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தை இயக்குவதற்கு முன் குறும்படங்களை இயக்கி வந்தார். கல்லூரியில் இவர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு ஜூனியர். இருவரும் சேர்ந்து கூட சில குறும்படங்களை இயக்கியுள்ளனர்.
சினிமாவில் நுழைய வேண்டும் என முடிவெடுத்து ஒரு கதையை எழுதினார். ஆனால், யாரையும் சந்தித்து கதையே சொல்ல முடியவில்லை. சில நடிகர்கள் நடிக்க முன்வரவில்லை. அதன்பின் ஜெயம் ரவியை சந்தித்து கதை சொன்னார். கதை நன்றாக இருந்தாலும் நடிக்க யோசித்த ஜெயம் ரவி ‘ஒரு காட்சியை எடுத்து வந்து என்னிடம் காட்டு.. நடிக்கிறேன்’ என சொல்லிவிட்டார்.
அவர் சொன்னபடியே ஒரு காட்சியை எடுத்து வந்து பிரதீப் காட்ட ஜெயம் ரவி நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான படம்தான் கோமாளி. இந்த படம் ஹிட் அடித்தது. அதன்பின் பிரதீப்புக்கு நடிக்கும் ஆசை வரவே லவ் டுடே படம் உருவானது. இந்த படம் அசத்தலான வெற்றியை பெற்றது.
இப்போது அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் டிராகன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. படம் வெளியாகி 10 நாட்களை தாண்டிவிட்ட நிலையில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. ஒருபக்கம் பிரதீப் ரங்கநாதன் பார்ப்பதற்கு தனுஷ் போலவே இருக்கிறார். அவர் நடிக்கும் விதமும் தனுஷை நியாபகப்படுத்துகிறது என பலரும் சொன்னார்கள்.
டிரெய்லரில் கூட சில காட்சிகள் தனுஷை நியாபகப்படுத்தியது. இந்நிலையில், டிராகன் திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இதற்கு நன்றி சொல்லும் விதமாக ஆந்திராவில் படக்குக்ழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது ‘தனுஷ் போல இருப்பது உங்களுக்கு பிளஸ்ஸா மைனஸா?’ என பிரதீப்பிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன பிரதீப் ‘நான் தினமும் கண்ணாடியில் என்னைத்தான் பார்க்கிறேன். அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என கமலை போல பதில் சொன்னார். மைக்கை அவரிடமிருந்து வாங்கி பேசிய அஸ்வத் மாரிமுத்து ‘ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் இருக்கிறது. அப்படி பிரதீப் அவருடைய அடையாளத்தில் இருக்கிறார். யாரையும் யாரோடும் கம்பேர் செய்ய வேண்டாம்’ என கூறினார்.