தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பிரதீப் அந்தப் படம் மாபெரும் வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. யாருப்பா இந்த இயக்குனர் என்று கேட்கும் அளவுக்கு கோமாளி படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமாக பார்க்கப்பட்டது. ஜெயம் ரவி யோகிபாபுவின் காமெடி அந்தப் படத்திற்கு பெரிய பிளஸ்.
சரி, அவரது இரண்டாவது படம் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லவ் டுடே படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார் பிரதீப். அந்தப் படத்தில் அவர்தான் ஹீரோ என்றதும் பல தயாரிப்பு நிறுவனங்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆனால் கதையின் ஆழத்தை புரிந்து கொண்டு இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என முன்வந்தார்கள் அர்ச்சனா கல்பாத்தி.
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான அந்தப் படம் மீண்டும் பிரதீப் ரெங்கநாதனுக்கு வேறொரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. அந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் 2 கே கிட்ஸ்களுக்கு ஏற்றவகையில் அமைந்ததனால் இளசுகள் மத்தியில் அந்தப் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. வசூலிலும் பட்டையை கிளப்பியது. கோமாளி மற்றும் லவ் டுடே படங்களுக்கு பிறகு எங்கு பார்த்தாலும் பிரதீப் ரெங்கநாதன் பேர்தான் அடிப்பட்டது.
அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார்? அல்லது அவரே படத்தை இயக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பை பிரதீப் உருவாக்கினார். இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம்தான் டிராகன். இதுவும் அவரது கெரியரில் முற்றிலும் வித்தியாசமான கதைகளமாக அமைந்தது. அதாவது எதார்த்தத்தில் நடக்கும் சம்பவத்தை சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் படமாக எடுத்துதான் பிரதீப் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்தார்.
அப்படித்தான் கல்லூரி வாழ்க்கையில் கெத்தாக சீன் போட்டுக் கொண்டு கண்டிப்பாக ஒரு மாணவன் சுற்றிக் கொண்டிருப்பான். கடைசியில் அவனுக்கும் சில கஷ்டங்கள் வரலாம். அதை மையப்படுத்திதான் டிராகன் படம் வெளியானது. வழக்கம் போல இந்தப் படமும் பிரதீப்புக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இப்போது அவரது நடிப்பில் எல்.ஐ.கே படமும் அடுத்து dude படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் பிரதீப் ரெங்கநாதன் ரஜினியை கமலையும் வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு பேச்சு சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பற்றி பிரதீப் ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியிருக்கிறார். அதாவது ரஜினி கமல் சாரை வைத்து படம் நான் எடுக்கவில்லை. என்னுடைய ஃபோக்கஸ் முழுக்க ஆக்டிங் மேல்தான் இருக்கின்றன என்று கூறினார். ஒரு வேளை அப்படி வாய்ப்பு வந்தால் என்று கேட்டதற்கு ‘இந்த நேரத்தில் அதை பற்றி என்னால் சொல்லமுடியாது’ என நைசாக நழுவிவிட்டார் பிரதீப்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…