இந்தளவுக்கு வெறிப்பிடிச்ச ரசிகரா பிரசன்னா? ‘குட் பேட் அக்லி’யில் அப்போ சம்பவம் இருக்கு

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:28  )

அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே அஜித்தின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் விடா முயற்சி. அந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என இதுவரை அறிவிக்கப்படவில்லை. குட் பேட் அக்லி படத்தை பொறுத்தவரைக்கும் பொங்கல் ரிலீஸ் ஆக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் சிக்கல் இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி வருகிறது .

இந்த படத்தில் சமீபத்தில் நடிகர் பிரசன்னா இணைந்து இருக்கிறார். அது சம்பந்தமான செய்திகள் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வந்தன. மேலும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி கூட சோஷியல் மீடியாவில் வைரலானது.

அந்த புகைப்படத்தில் காரில் முன்பக்கம் உட்கார்ந்து இருப்பது பிரசன்னா தான் என அனைவரும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் பிரசன்னாவின் ஒரு பழைய வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் அஜித்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் பிரசன்னா.

பிரசன்னாவிடம் அஜித் படம் விஜய் படம் யார் படத்தில் முதலில் நடிக்க ஆசைப்படுவீர்கள் எனக் கேட்டபோது யோசிக்காமல் அஜித் படம் தான் என பட்டென பதில் சொன்னார். அதற்கு காரணம் என்ன என கேட்டபோது படிக்கும் போதிலிருந்தே அஜித்தை பார்த்து வளர்ந்தவன்.

சினிமாவில் நடிக்க வரும்போது கூட அஜித் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவருடைய படங்களை பார்த்து நான் வளர்ந்தவன். அவர் எப்படி நடிக்கிறார். எப்படி சில காட்சிகளில் அழுகிறார். எந்த மாதிரியான தோற்றத்தில் அவர் அழகாக இருக்கிறார் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வளர்ந்தவன்.

அவர் நடித்த படங்களில் முகவரி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார். இந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. இதை குட் பேட் அக்லி திரைப்படத்தோடு கனெக்ட் செய்து ரசிகர்கள் அப்போ பிரசன்னாவை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு சம்பவம் செய்ய இருக்கிறார் என கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.

பொதுவாக பெரிய நடிகர்களை பொருத்தவரைக்கும் அந்த நடிகர்களின் ஃபேன் பாய் மூமண்டாக சில விஷயங்கள் படத்தில் இருக்கும். உதாரணமாக விக்ரம் படத்தில் கமலின் ஃபேன் பாய் மூமெண்டாக சில தரமான சம்பவங்களை செய்திருந்தார் லோகேஷ். அதைப்போல குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித்திற்கும் பிரசன்னாவிற்கும் இடையே ஏதாவது ஒரு தரமான சம்பவத்தை ஆதிக் உருவாக்கி இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Next Story