சினிமாவுக்காக தன் மகன் என்று கூட பார்க்காம தியாகராஜன் செய்த வேலை! செதுக்குறதுனா இதுதானா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் பிரசாந்த் அவருடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். நாளை பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்படம் ரிலீஸாக இருக்கின்றது. அவருடைய அப்பாவான தியாகராஜன் இயக்கத்தில் அந்தப் படம் வெளியாக இருக்கிறது.

படத்தில் பிரசாந்துடன் இணைந்து ப்ரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, கார்த்திக் போன்ற பல முக்கிய பிரபலங்கள் அனைவரும் நடித்திருக்கின்றனர். சிம்ரன் பிரசாந்துடன் அந்தகன் படத்தில் இணைவது இது ஏழாவது படமாகும் . இதற்கு முன் நடித்த மற்ற 6 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.

இதுவும் ஒரு வகையில் படத்திற்கான எதிர்பார்ப்புக்கு காரணமாக இருக்கின்றது. இந்த நிலையில் தியாகராஜன் தன் மகன் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக பெரிதும் மெனக்கிட்டிருக்கிறார். எப்படி விஜய்க்காக சந்திரசேகர் பல இயக்குனர்களை தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டாரோ அதே போல் பிரசாந்தை சினிமாவில் நுழைக்க அத்தனை தகுதிகளுக்கு உட்படுத்தி ஹீரோ என்ற அந்தஸ்துக்கு உயர்த்தினார்.

பிரசாந்த் கற்றுக் கொள்ளாத கலைகள் என எதுவுமே இல்லை. குதிரை ஏற்றம், சிலம்பு, நடனம் ,சண்டை என அத்தனை கலைகளும் பிரசாந்திற்கு அத்துப்பிடி. அதே போல் படத்திற்காக என்ன பயிற்சிகள் எல்லாம் எடுக்க வேண்டுமோ அதற்கெல்லாம் பிரசாந்தை ஊக்கப்படுத்தியவர் தியாகராஜன் தான்.

அப்படித்தான் விரும்புகிறேன் படத்தில் ஒரு தீயணைப்பு வீரராக பிரசாந்த் நடித்திருப்பார். அதற்காக உண்மையிலேயே தீயணைப்பு பயிற்சியை எடுக்க சொன்னாராம் தியாகராஜன். உண்மையிலேயே தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் எப்படியெல்லாம் போய் காப்பாற்ற வேண்டும்? அவசர கால உதவி எப்படி செய்ய வேண்டும் என அனைத்தையும் கற்றுக் கொண்டுதான் நடித்தாராம் பிரசாந்த்.

அந்த பயிற்சிகளை முடித்துவிட்டு தீக்காயங்களுடன் வெளியே வந்த பிரசாந்தை சக தீயணைப்பு வீரர்கள் கைதட்டு பாராட்டினார்களாம்.

Next Story