எப்ப வந்தாலும் நான் ஹீரோ!.. சூர்யாவை ஓவர்டேக் செய்த பிரசாந்த்!.. அடிச்சி தூக்கும் அந்தகன்!..
Anthagan: வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரசாந்த். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. ஒரே படத்தில் இவருக்கு ரசிகர் மன்றங்களும் உருவானது. எனவே, தொடர்ந்து பல படங்களிலும் ஒப்பந்தமானார். அவரின் கால்ஷீட்டை அவரின் அப்பா தியாகராஜனே பார்த்துகொண்டார்.
நல்ல உயரம் நிறம், அழகு, நன்றாக நடனம் ஆடுவார், சண்டை போடுவார் என்பதால் பிரசாதை வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் ஆசைப்பட்டனர். பல காதல் கதைகளிலும் நடித்தார் பிரசாந்த். ஆனால், சொந்த வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டு சினிமாவிலிருந்து சில வருடங்கள் விலகி இருந்தார்.
ஒருபக்கம், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் வந்து மார்க்கெட்டை பிடித்துவிட பிரசாந்துக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. அப்பாவின் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக ஓடவில்லை. தெலுங்கு சினிமா பக்கம் சென்றும் சில படங்களில் நடித்தார். விஜயின் கோட் படத்தில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
ஒருபக்கம் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் அந்தகன் திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த் என பலரும் நடித்திருக்கிறார்கள். ஹிந்தியில் வெளியான அந்ததூண் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சென்னை ரோகிணி தியேட்டரில் காலை 9 மணி காட்சி ஃபுல் ஆகிவிட்டது. பொதுவாக விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது கோயம்பேட்டியில் உள்ள ரோகிணி தியேட்டர் களை கட்டும். நடிகர், நடிகைகளும் இந்த தியேட்டரில் படம் பார்க்க வருவார்கள்.
அப்படித்தான் இன்றைக்கும் இந்த தியேட்டர் களை கட்டி இருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் மாஸ் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய 2 படங்களும் போதிய ரசிகர்கள் இல்லாமல் இதே ரோகிணி தியேட்டரில் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால், பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தின் முதல் காட்சி அந்த தியேட்டரில் ஹவுஸ்புல்லாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.