மூணு படம் வரும்போது மோத வேணாம்!.. அந்தகன் ரிலீஸ் தேதியை மாற்றிய பிரசாந்த்…

Published on: August 8, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என பல படங்களில் நடித்த தியாகராஜனின் மகன் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரசாந்த். முதல் படமே சூப்பர் ஹிட். நல்ல உயரம், அழகான முகம் என ரசிகர்களை கவர்ந்தார். நிறைய பெண் ரசிகைகளும் இவருக்கு உருவானார்கள்.

சினிமாவில் பிரசாந்த் நன்றாக வளர்ந்தார். மணிரத்னம், பாலு மகேந்திரா, ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தவர் இவர். அந்த வாய்ப்பு பல ஹீரோக்களுக்கும் கிடைக்கவில்லை. விஜய் எனக்கு தம்பி போல இருக்கிறார் என சொல்லி பிரசாந்துடன் நடித்தவர் ஐஸ்வர்யா ராய்.

இப்படி சினிமாவில் உச்சம் தொட்ட பிரசாந்த் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். அந்த இடைவெளியை விஜய், அஜித் போன்றோர் பயன்படுத்தி மார்க்கெட்டை பிடித்தனர். எனவே, பிரசாந்த் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது.

சில படங்களில் ஹீரோவாக பிரசாந்த் நடித்தாலும் அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இதில் வின்னர் மட்டுமே விதிவிலக்கு. தற்போது கோட் படத்தில் விஜயின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். ஒருபக்கம், அந்தகன் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இந்த படம் உருவாகி சில வருடங்கள் ஆகிவிட்டது. ஹிந்தியில் ஹிட் அடித்த ஒரு படத்தின் தமிழ் ரீமேக் இது. இப்படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜனே தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், யோகிபாபு என பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஆகஸ்டு 15க்கு இப்படம் வெளியாகும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம், விக்ரமின் தங்கலான், அருள்நிதியின் டீமாண்டி காலணி 2, கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய படங்களும் அதே தேதியில் வெளியாகிறது.

எனவே, அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகுமா என பலரும் நினைத்தனர். இந்நிலையில்தான், ஆகஸ்டு 9ம் தேதி அந்தகன் படம் வெளியாகும் என பிரசாந்த் அறிவித்திருக்கிறார். அதாவது, தங்கலானுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அந்தகன் படம் வெளியாகிறது. இது ஒரு நல்ல மூவ் என விமர்சகர்கள் பிரசாந்தை பாராட்டி வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment