போட்டி போடுறதுல ஒரு நியாயம் வேண்டாமா? பிரபல மல்லு ஜோடியை அள்ளிக்கொண்டு வந்த விஜய், அஜித்!..
கோலிவுட்டில் விஜய் மற்றும் அஜித் இருவரின் போட்டிக்கு ஒரு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கும் நிலையில் பிரபலங்களை ஒப்பந்தம் செய்துக்கொள்வதிலும் தற்போது போட்டிப்போட துவங்கி இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
இந்த வருடம் தொடங்கியதில் இருந்தே மலையாள திரைப்படங்கள் மிகப்பெரிய உச்சப்பட்ச வெற்றியை பெற்று இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த லிஸ்டில் காதல் கதையில் ஹிட்டடித்தது பிரேமலு படம். அதிலும் இப்படத்தின் நாயகன் நஸ்லின் மற்றும் மம்தா பைஜு இருவரும் அதிகம் கவரப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது இருவருக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் தனியாக இல்லாமல் ஜோடியாகவே கோலிவுட்டின் முக்கிய படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகி இருக்கின்றன. தளபதி விஜயின் சினிமா கேரியரின் கடைசி படமாக உருவாக இருப்பது தளபதி 69. இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் இருவரும் ஜோடியாகவே நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இவ்விரு படங்களிலும் இருவரும் முக்கிய வேடம் ஏற்றிருந்தாலும் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு ஸ்பையினில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதே நேரத்தில், விஜயின் கடைசி படமான தளபதி 69 தன்னுடைய முதற்கட்ட பணிகளை தொடங்கி இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.