டேய் யாருடா நீ?... ஒரு செம ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி!.. மரண வெயிட்டிங்கில் கார்த்தி!...
Actor karthi: பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் மகன் இவர். வெளிநாட்டில் படித்து வேலை செய்து வந்த கார்த்திக்கு சினிமா மீது அதிக ஆர்வம். இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். மணிரத்னத்திடம் சில படங்களில் வேலை செய்தார்.
பருத்திவீரன் படத்தில் சூர்யா நடிக்காமல் போகவே அவருக்கு பதில் கார்த்தி நடித்தார். முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார். அதன்பின் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக மாறிவிட்டார் கார்த்தி. பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வெற்றிகளை கொடுத்திருக்கிறார்.
கார்த்தியின் 25வது திரைப்படமாக ஜப்பான் படம் வெளியானது. ஆனால், அந்த படம் ஓடவில்லை. 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தியும், அரவிந்த்சாமியும் இணைந்து நடித்து உருவான திரைப்படம்தான் மெய்யழகன். உறவுகளுக்குள்ள முக்கியத்துவம் பற்றி இப்படத்தில் பேசியிருந்தார்கள்.
தஞ்சாவூர் பக்கம் வசிக்கும் மக்களின் பேச்சு, வாழ்க்கை முறை பற்றி அழகாக காட்டியிருந்தனர். பலரும் இப்படத்தை பார்த்து கண்கலங்கிவிட்டதாக சொன்னார்கள். இந்த படத்தின் கதையை படித்து பார்த்த சூர்யா தம்பி கார்த்தியிடம் ‘உனக்கு மட்டும் எப்படி இதுபோன்ற கதைகள் கிடைக்கிறது’? என கேட்டாராம்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கார்த்தி ‘பிரேம்குமார் அழகாக கதை எழுதுவார். வாசிக்கவே இனிமையாக இருக்கும். அவர் ஒரு வரலாற்று கதையை எழுதி வருகிறார். அந்த கதையை கேட்டவுடன் டேய் யாருடா நீ?.. எப்படிடா இப்படிலாம் எழுதுற?’ என கேட்க தோன்றியது. அவர் எப்போது அந்த கதையை எழுதி முடிப்பார் என ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என கார்த்தி கூறியிருக்கிறார்.
சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்கள் வரலாற்றுக்கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொன்னியின் செல்வன், கங்குவா ஆகிய படங்கள் வரலாற்று கதைதான். சிம்புவும் ஒரு வரலாற்று கதையில் விரைவில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான், கார்த்திக்கும் அந்த ஆசை வந்திருக்கிறது.