ஒருவழியாக ஓடிடிக்கு வந்தது ஆடுஜீவிதம்

by ராம் சுதன் |

நடிகர் பிரித்விராஜ், அமலா பால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஒருவழியாக வெளியாகி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியான இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான ஆடுஜீவிதம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் ஈட்டியது. தற்போதைய சூழ்நிலையில் படம் வெளியாகி ஒரு மாத காலத்திற்குள் படங்கள் ஓடிடியில் வெளியாகி விடுகின்றன.

நிலைமை இப்படி இருக்க மூன்று மாதங்கள் கடந்து நான்காவது மாதத்தில் தான் ஆடுஜீவிதம் ஓடிடிக்கு வந்துள்ளது. படக்குழு இதற்கு கடுமையாக உழைத்துள்ளதால் ஆஸ்கார் விருதுக்கும் இப்படத்தினை அனுப்பிட முடிவு செய்தது.

இதன் காரணமாக தான் ஆடுஜீவிதம் ஓடிடி இவ்வளவு தாமதமானதற்கு காரணமாகும். தற்போது நெட்பிளிக்ஸ் இப்படத்தினை கைப்பற்றி இருக்கிறது. படம் வருகின்ற ஜூலை 19-ம் தேதி அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகிறது.

இதனால் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கும் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள நெட்டிசன்களுக்கும் செம கொண்டாட்டமான வாரமாக இருக்கப்போகிறது. 82 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் சுமார் 160 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இதுதவிர சாட்டிலைட், ஓடிடி உரிமை என நல்ல ஒரு தொகையை படக்குழு பார்த்து விட்டது. இப்படத்தின் வெற்றிக்கு ஏஆர் ரஹ்மானின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story