ஏன்டா தமிழ் தெரியுதுனு இருக்கும்? பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரியா ஆனந்தை பதற வைத்த கேள்வி…
அந்தகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியா ஆனந்திடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வியால் கடுப்பாகி கலாய்த்துவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
புகைப்படம் திரைப்படத்தில் முதலில் நடிக்க கமிட்டானாலும், அவர் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் தான் முதலில் ரிலீஸானது. அப்படத்தில் பிரியாவின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. முக்கியமாக தமிழ் நாயகி என்பதால் ரசிகர்கள் லைக்ஸ் குவித்தனர்.
பின்னர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். அங்கும் அவருக்கு சரியான படங்கள் அமைய தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் தற்போது பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்காமல் கேரக்டர் ரோலில் மட்டுமே நடித்திருக்கிறார். கடைசியாக விஜயின் லியோ திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார்.
பிரியா ஆனந்த் தற்போது ஹீரோயினாக நடித்திருக்கும் கடைசி படமாகவே அமைந்து இருக்கிறது அந்தகன். இப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இப்படத்தினை தியாகராஜன் இயக்கி இருக்கிறார். அந்தாதுன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய தியாகராஜன் முதலில் மோகன் ராஜாவை இயக்குனராக ஒப்பந்தம் செய்தார். அவர் சில மாதங்களில் வெளியேற ஜேஜே ஃபெட்ரிக் உள்ளே வந்தார். அவரும் கிளம்பிவிட தியாகராஜனே இந்த படத்தினை இயக்கி வருகிறார்.
2020ல் தொடங்கப்பட்ட இப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் 9 திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து படக்குழு புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள துவங்கினர். அப்போது நடிகை பிரியா ஆனந்திடம் இடுப்பு சுளுக்கிச்சிடுச்சாமே என ஒரு கேள்வி கேட்கப்பட அதில் படக்குழுவே முகம் சுளித்தது.
இருந்தும் அதை காட்டிக்கொள்ளாத பிரியா ஆனந்த் இந்த மாதிரி சமயத்தில் தான் தமிழ் ஏன் தான் தெரிஞ்சிதுனு இருக்கும். ஏன் அண்ணா இப்படி பண்ணுறீங்க எனக் கலாய்ப்பார். மேலும், தியாகராஜன் பெண்ணுக்கு தான் சுளுக்கு பிடிக்கும். அதுவும் எக்ஸர்சைஸ் செஞ்சா எல்லாருக்குமே அப்படி தான் இருக்கும். இப்பையா இப்படி கேள்வி கேட்பீங்க என நாசுக்காக அவரை கண்டித்து இருப்பார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.