Categories: Cinema News

55 நாள் ஷூட்டிங் செஞ்சா அரை நாள் காட்சியை வச்சாங்க… அம்மணிக்கு ஓவர் பீலிங்கா இருக்கே!..

Kollywood: சமீபகாலங்களாக ஒரு படத்திற்கு நிறைய பிரபலங்களை குறிப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் தன்னை தேவையே இல்லாமல் இழுத்து நடிக்க வைத்து கடைசியில் காலை வாரிய படம் குறித்து பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டிவி நியூஸ் வாசிப்பாளராக இருந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். அவருக்கு விஜய் டிவியின் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்து வந்தவர் மேயாத மான் திரைப்படம் மூலம் நாயகியாக கோலிவுட்டிற்குள் வந்தார். முதல் படம் சுமாரான விமர்சனமே பெற்றது. அப்படத்தை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

இருந்தும் சமீபகாலமாக பிரியா பவானி சங்கர் நடித்துவரும் திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களை குறித்து வருகிறது. இதற்கு காரணம் இவருடைய ராசி தான் என பலரும் கமெண்ட் செய்து வந்தனர். அதற்கு தன்னுடைய பேட்டி ஒன்றில் பிரியா பவானி ஷங்கர் கூறும் போது ஹீரோக்களை யாருமே குறை கூறுவதில்லை.

படம் வெற்றி பெற்றால் நடிகைகளை சொல்லிவிட முடியுமா எனவும் பேசி இருப்பார். இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தான் ஒரு மிகப்பெரிய படத்திற்காக 55 நாட்களுக்கும் அதிகமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன்.

ஆனால் டப்பிங் சென்று பார்த்தால் அரை நாட்களுக்கு மட்டுமே காட்சிகள் அமைந்திருந்தது. ஒன்றுமே சொல்ல முடியாமல் அதை முடித்துக் கொடுத்துவிட்டு வந்தேன். அதை தொடர்ந்தே படம் வெளியானதாக தெரிவித்திருக்கிறார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இது திருச்சிற்றம்பலம் படம் தான் என கலாய்த்து வருகின்றனர்.

Published by
ராம் சுதன்