விடுதலை 2க்கு வந்த சிக்கல்... கைகொடுப்பாரா விஜய் சேதுபதி?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:18  )

விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் சூரியும், விஜய்சேதுபதியும் நடிச்சிருந்தாங்க. படம் பட்டையைக் கிளப்பியது. சூரி முதன் முதலா கதையின் நாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விடுதலை 2 உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கும் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அது என்னன்னு பார்க்கலாமா...

விடுதலை 2 படத்தை டிசம்பர் 20 ரிலீஸ்னு சொல்லிட்டாங்க. வெற்றிமாறனும் இந்தப் படத்தை எடிட் பண்ணிப் பார்த்துக்கிட்டு இருக்காராம். தேவைப்பட்டா ஒரு வாரம் திரும்ப படப்பிடிப்பை எடுக்கணுமாம். விஜய்சேதுபதி பாண்டியராஜ் படத்தோட சூட்டிங்ல இருக்காரு. அதனால பாண்டிராஜைத் தொடர்பு கொண்டு ஒரு வாரம் மட்டும் அவரை அனுப்பி வைங்க. நாங்க பேச் ஒர்க் முடிச்சி அனுப்புறோம்னு பர்மிஷன் கேட்குற வேலை நடந்துக்கிட்டு இருக்காம்.

அப்படிப் பார்க்கும்போது விடுதலை 2 விஜய் சேதுபதி கையில தான் இருக்குதாம். அவர் என்ன சொல்வாருன்னா பாண்டிராஜ் சாருக்கிட்ட போய் தயவு செய்து என்னை அனுப்பிடாதிங்க சார். நான் மூணு மாசம் பிசின்னு சொல்லி என்னை லாக் பண்ணுங்க சார். அப்ப தான் படம் ரிலீஸ் ஆகும் என்று விஜய்சேதுபதி சொல்லலாம் என சிரிக்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி.

விடுதலை 2 படத்தில் சூரி, விஜய்சேதுபதியுடன் மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ உள்பட பலரும் நடித்துள்ளனர். விடுதலை படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆபாசமான வார்த்தைகள் எல்லாம் பேசுறாங்கன்னு சர்ச்சையிலும் சிக்கியது.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா. பாடல்கள் செம மாஸாக இருந்தன. அதே போல விடுதலை 2 படத்திற்கும் அவர் தான் இசை அமைப்பாளர். படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனும் சேர்ந்து எழுதியுள்ளார். ஹீரோவான முதல் படத்திலேயே அட்டகாசமாக நடித்து சூரி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்.

Next Story