விடாமுயற்சி திரைப்படத்தால் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது துபாயில் இருந்து வருகின்றார். கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித் இந்த ஆண்டு முழுவதும் கார்பந்தயத்தில் போட்டியிட இருப்பதாக கூறி இருக்கின்றார்.
இதற்காக தான் கமிட் செய்திருந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார். நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைப்படமும் அவரது நடிப்பில் வெளியாகவில்லை.
விடாமுயற்சி திரைப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முழு படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்துவிட்டார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இப்படம் அந்த தேதியில் வெளியாகுமா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. அதற்கு காரணம் விடாமுயற்சி திரைப்படம் தான். விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியானாலும் அதன் ஓடிடி ரிலீஸ் அதாவது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கின்றது.
இந்த சமயத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆனால் யாரும் விடாமுயற்சி திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் பார்ப்பதற்கு முன்வர மாட்டார்கள். இதனால் பெரும் தொகை கொடுத்து வாங்கிய நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் குட் பேட் அக்லி படக்குழுவினருக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. அதில் மிகவும் வலியுறுத்தி படத்தை தள்ளி வைப்பதற்கு கோரிக்கை வைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…