Categories: Cinema News latest news

Vijay: விஜய் முதல்வர் ஆவாரா? நயன்தாரா லேடிஸ் சூப்பர்ஸ்டாரு ஆனது எப்படி?

தமிழ்த்திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விஜய், நயன்தாரா, எஸ்.என்.சுரேந்தர் குறித்து சகட்டு மேனிக்கு ஆங்கரையே கலாய்க்குற அளவுக்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு கலகலப்பாகப் பேட்டி கொடுத்துள்ளார். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போமா…

முதல்வர்: விஜய் முதல்வராவது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மக்களோட எதிர்பார்ப்பு அப்படி அல்ல. ரசிகர்கள் வேற. மக்கள் வேற. அவங்க குரூப் குரூப்பா இருப்பாங்க. ஒரே ஒரு குரூப் ஓட்டுப் போட்டா பத்தாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் போடுறாங்களான்னு பார்க்கணும். போட்டா நடக்கும். போடறாங்களாங்கறதுதான் கேள்வி. புதுசா யார் வந்தாலும் எதிர்பார்ப்பு இருக்கும்.

சிவகார்த்திகேயன்: இவங்க ஏதாவது பண்ணுவாங்களான்னு பார்ப்பாங்க. ஒண்ணும் பண்ணலன்னா போயிடுவாங்க. நான் நடிப்பை சொன்னேன். சிவகார்த்திகேயன் கையில விஜய் துப்பாக்கியைக் கொடுத்தாரு. அவரு பிடிச்சிக்கிட்டாரு. அதை மக்கள் பிடிச்சிட்டாங்க.

கடவுளே அஜீத்தே: கொஞ்ச நாளைக்கு முன்னால கடவுளே அஜீத்தேன்னு சொன்னாங்க. அதை வெளிய எங்கயாவது சொன்னா பரவாயில்ல. ஐயப்ப மலைக்குப் போகும்போது சரணம் ஐயப்பான்னு சொல்லாம கடவுளே அஜீத்தேன்னா சொல்வாங்க. இதை விட கொடுமை என்ன இருக்கு?

நயன்தாரா: மக்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க. அவங்கள எப்படி அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியும்? மதயானைக்கூட்டம் மாதிரி வெறி கொண்டு கிளம்பிட்டாங்க. நடிகர்கள் மேல காட்டுற வெறி ரொம்ப ஓவர். இல்லன்னா நயன்தாரா எல்லாம் லேடி சூப்பர்ஸ்டாரா வருவாங்களா?

எஸ்.என்.சுரேந்தர்: மைக் மோகனுக்கு டப்பிங் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர். அவரு இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காருன்னு ஆங்கர் கேள்வி கேட்கிறார். மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் பற்றி என்ன செய்றாங்கன்னு பார்க்குறதா என்னோட வேலை?

ஒரு படத்துல பாடல் பாடுனாரு. ஊதியம் கொடுத்தாச்சு. அப்புறம் அவருக்கும் எனக்கும் என்னங்க தொடர்பு? விஜய் அவரு மாமாவுக்கே தொடர்பு இல்லன்னு போயிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விஜயின் மாமா தான் எஸ்.என்.சுரேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
sankaran v