அப்பா பிரபல தயாரிப்பாளர் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைந்தவர்தான் விஷால். சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் ஆசையெல்லாம் கோலிவுட் மீதுதான். துவக்கத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சில படங்களில் வேலை செய்தார். அதன்பின் நடிக்கும் ஆசை வந்தது.
செல்லமே படம் மூலம் நடிக்க துவங்கினார். ஆனால், திமிறு திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரலப்படுத்தியது. சண்டக்கோழி படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அதன்பின் கடந்த பல வருடங்களாக பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார்.
சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்தார் ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் மாறினார். நடிகர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு முக்கிய பதவியில் அமர்ந்தார். ஆனால், ஏற்கனவே தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களில் பதவியில் இருந்தவர்கள் விஷாலுடன் ஒத்துழைக்கவில்லை.
அவர்கள் விஷால் மீது பல குற்றச்சாட்டுக்களையும் வைத்தனர். ஆனால், விஷால் எதையும் கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால், நடக்கவில்லை. சரத்குமார், ராதாரவிக்கு எதிராக பல கருத்துக்களையும் சொன்னார். விஷாலுக்கு எதிராக ஒரு பெரும் கூட்டமே வேலை செய்தது.
தயாரிப்பாளர் சங்க பணத்தை விஷால் முறைகேடு செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது. விஷாலும் நீதிமன்றத்தை அணுகினார். நடிகர் சங்க தேர்தல் நடந்து சில வருடங்கள் ஆகியும் இப்போது வரை முடிவு அறிவிக்கப்படவில்லை. ஒருபக்கம், வெற்றி படங்களை கொடுக்க விஷால் போராடி வருகிறார். பல வருடங்களுக்கு பின் மார்க் ஆண்டனி ஓடியது. ஆனால், கடைசியாக வெளியான ரத்னம் படம் ஓடவில்லை.
இந்நிலையில், 2017 – 19வரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் இருந்தபோது முறைகேடாக ரூ.12 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆலோசித்த பின்னரே படத்தை துவங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…