பெயிட் ரிவ்யூ இருக்கு!.. நெகட்டிவ் விமர்சனம் வந்தா தயாரிப்பாளர்களுக்கு ஆபத்து.. சிவி குமார் பேச்சு!

Published on: August 8, 2025
---Advertisement---

அட்டகத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சிவி குமார் எனும் சி விஜயகுமார் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி, முண்டாசுப்பட்டி, எனக்குள் ஒருவன், இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், இறைவி, ஜாங்கோ, பீட்சா 3 மற்றும் சூது கவ்வும் 2 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

இயக்குனராக மாயவன் மற்றும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக அவர் தயாரிப்பில் வெளியான சூது கவ்வும் 2 திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் தோல்வியை அடைந்தது.

நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு விமர்சனத்திற்கு பணம் கொடுக்கிறார்களா? வாங்குகிறார்களா? என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெயிட் ரிவ்யூ இருக்கத்தான் செய்கிறது என்றும் தயாரிப்பாளர்கள் நெகட்டிவ் விமர்சனத்தை விரும்புவதில்லை அதற்காக சில முன்னணி யூடியூப் விமர்சகர்களுக்கு ஆயிரம் முதல் லட்சம் வரை பணம் கொடுப்பதாக கூறியுள்ளார்.

எதற்காக விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்றால், தியேட்டரில் படம் வெளியான பின்னர் தான் பல ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வாங்குகின்றன. அப்படி இருக்கும் சூழலில் விமர்சனங்களை அந்த நிறுவனங்கள் ஒரு முக்கிய அங்கமாக கணக்கிடுவதால் பெரும்பாலும் தங்களது படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் கவனமாக உள்ளனர் என்று தயாரிப்பாளரான சி.வி. குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment