நம்மள சுற்றி கெட்ட ஈனப்பிறவிங்க இருக்காங்க!.. யாரப்பா சொல்றாரு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்து பிரபலமானவர் தனஞ்செயன். தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், சினிமா ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சினிமா ஆலோசகராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய பதவியிலும் இருந்து வருகின்றார்.
தமிழில் அபியும் நானும், அவள் பெயர் தமிழரசி, சித்து +2 போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கின்றார். இந்தி, மலையாள உள்ளிட மொழிகளிலும் தயாரிப்பாளராக இருந்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் கோடியில் ஒருவன், கொலை, ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்களை பிற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கின்றார்.
இவர் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை வெளிப்படையாக சமூக வலைதள பக்கங்களில் பேசி விமர்சனத்திற்கு ஆளாவது தான் இவரது வழக்கம். சமீபத்தில் இவர் தங்கலான், கங்குவா ஆகிய படங்கள் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றிருந்தார். மேலும் கங்குவா திரைப்படத்திற்கு வந்த விமர்சனத்தை பார்த்து தமிழ் சினிமாவை சேர்ந்த சினிமா விமர்சகர்கள் பலரையும் தாறுமாறாக பேசியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருக்கும் இரு முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் தான் வேண்டும் என்றே இந்த திரைப்படத்தை தோல்வி அடைய செய்வதற்கு இப்படி எல்லாம் திட்டமிட்டு வேலை பார்த்து வருகிறார்கள் என்று வார்த்தையை விட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தன்னை குறித்து வெளியாகும் அவதூறான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சமூக விமர்சகர்கள் தன்னைக் குறித்து தேவையில்லாத கருத்துக்களை வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அந்த பதிவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நம்மைச் சுற்றி பல துரோகிகளும் நன்றிகெட்ட ஈனப்பிறவிகளும் இந்த உலகில் நிறைந்து இருக்கிறார்கள். இந்த உலகில் நம் குடும்பமும் குறிப்பாக நம் மனைவியும் நம்மோடு இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே நமக்கு துணை. அவர்களை மட்டும் நாம் எப்போதும் இழக்கக்கூடாது. அவர்கள் தான் நம் வெற்றிக்கு வழிகாட்டி' என்று கூறி இருக்கின்றார் தனஞ்செயன்
தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் பதிவு யாருக்கானது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சமீப நாட்களாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் தனது பேட்டியில் தனஞ்செயன் குறித்து காட்டமாக பேசியிருந்தார். அவர் நடிகர் சூர்யாவுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கு ஆபத்தானவர் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். ஒருவேளை அவரை தான் மறைமுகமாக சாடி தனஞ்செயன் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.