Cinema News
ஷங்கரால் சொத்தை இழந்த தயாரிப்பாளர்!.. ஒரு படத்துல மொத்த சோலிய முடிச்சுவிட்டீங்களே..
தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு. தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் தயாரித்திருக்கின்றார். தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் பேனர் பெயரில் பல வருடங்களாக பல பிளாக் பாஸ்டர் திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றார். தெலுங்கில் இவர் தயாரித்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கிறது.
தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் ஷியாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் 2023 ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. பொங்கல் பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் தயாரித்து இருந்தால் தில் ராஜு படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கிரிஞ்சாக இருக்கின்றது என்று கூறினார்கள் . இதனால் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சற்று சறுக்களை சந்தித்தது. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நேரடியாக வெளியான இந்த திரைப்படம் தமிழில் நல்ல வசூலை பெற்றாலும் தெலுங்கில் பெரிய வெற்றியை பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கரை நம்பி மேலும் ஒரு நஷ்டத்தை சந்தித்திருக்கின்றார் தில் ராஜு. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர் கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

கிட்டத்தட்ட இந்த திரைப்படத்திற்கு 500 கோடி வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் வந்த தகவல் படி 5 பாட்டிற்கு மட்டும் சங்கர் 75 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கின்றாராம். இப்படி மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள்.
அதிலும் இயக்குனர் ஷங்கருக்கு இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு சிறந்த கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியன் 2வுக்கு எந்த அளவு விமர்சனம் வந்ததோ அதே அளவு விமர்சனத்தை கேம் சேஞ்சர் திரைப்படமும் சந்தித்து வருகின்றது. படம் விமர்சனங்களை சந்தித்தாலும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்படுகின்றது.
வாரிசு திரைப்படத்தில் வரும் பெரிய வீட்டை செட்டு போட்டு எடுத்திருந்தார்கள். அந்த இடம் முழுக்கவே தில் ராஜுக்கு சொந்தமானதுதான். தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ‘ஜருகண்டி’ பாடலும் அந்த இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த இடம் தில் ராஜுக்கு இல்லையாம். அந்த இடத்தை கடன் கொடுத்தவர்கள் தற்போது எடுத்துக் கொண்டார்களாம்.
இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷங்கரை நம்பி பட்மெடுத்து இப்படி ஒரு சொத்தை இழந்துவிட்டாரே என பதிவிட்டு வருகிறார்கள்.