Categories: Cinema News latest news

விஜய் மாதிரி மத்த ஹீரோக்கள் செஞ்சா!.. ஃபீல் பண்ணி பேசும் வாரிசு பட தயாரிப்பாளர்!…

Actor vijay: 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருபவர் விஜய். விஜய்க்கும் மற்ற ஹீரோக்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு இயக்குனர் கதை சொல்லப்போனால் 2 மணி நேரம் தொடர்ந்து சொன்னாலும் இடையில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பொறுமையாக கேட்பார். கதையை பற்றி தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை ஓப்பனாக சொல்லிவிடுவார். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் ‘இது எனக்கு செட் ஆகாது’ என சொல்லிவிடுவார்.

மற்ற ஹீரோக்களை போல ‘கதையை டெவலப் செய்து விட்டு வாங்க’.. ‘ஒரு படம் முடிச்சிட்டு வாங்க’… என்றெல்லாம் பொய்யான வாக்குறுதியை கொடுக்கமாட்டர். கதை, இயக்குனர் எல்லாம் ஓகே செய்து நடிக்கப்போய்விட்டால் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வார். உணவை பொறுத்தவரை அவர் கேட்டால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், மிகவும் எளிமையான சாப்பாட்டையே ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடுவார். இதை அவருடன் நடித்த பல நடிகர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

அதேபோல், சில விஷயங்களை சரியாக கடை பிடிப்பார். மாலை 6 மணி வரை மட்டுமே நடிப்பார். வெளியூர் படப்பிடிப்பு, இரவு காட்சி தேவைப்படுகிறது என்றால் மட்டுமே 6 மணிக்கு மேல் நடிக்க சம்மதிப்பார். 7 மணிக்கெல்லாம் டின்னரை முடித்துவிட்டு சீக்கிரமே தூங்கப்போய்விடும் பழக்கம் கொண்டவர் விஜய். சினிமாகாரர்கள் கொடுக்கும் இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அதிகம் பேசமாட்டார். தான் உண்டு. தன் வேலை உண்டு என இருப்பார். இதனாலேயே அவரை பலருக்கும் பிடிக்காமல் போகும். ஆனால், ஒருகட்டத்தில் அவர் சரியாகவே இருக்கிறார் என அவர்களுக்கே தோன்றிவிடும். இது எல்லாமே அவருடன் நடித்தவர்களும், அவரை வைத்து படம் எடுத்தவர்களும் சொன்னதுதான்.

இந்நிலையில், விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜு ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் சார் கால்ஷீட் கொடுப்பதில் மிகவும் வெளிப்படையானவர். ஒரு படத்திற்கு 6 மாதம். ஒவ்வொரு மாதம் 20 நாட்கள் நடிப்பார். அவரை போல மற்ற நடிகர்கள் செய்தால் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தெலுங்கு சினிமாவில் யாரும் இதை பின்பற்றுவதில்லை’ என பேசியிருக்கிறார்.

தெலுங்கில் முக்கியமான தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜூ. ஷங்கரை வைத்து கேம் சேஞ்சர் படமெடுத்து 150 கோடிக்கும் மேல் நஷ்டமடைந்தவர் இவர்தான். வாரிசு படத்தில் சரத்குமாரின் வீடு இருக்கும் பெரிய இடம் இவருக்கு சொந்தமானது. கேம் சேஞ்சர் படத்தின் நஷ்டத்தால் அந்த இடம் தில் ராஜுவின் கையை விட்டுப்போனது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா