இதுக்கே கண்ண கெட்டிருச்சு! சூர்யாவை விடாமல் துரத்தும் ‘கங்குவா’.. தயாரிப்பாளர் கொடுத்த அடுத்த அப்டேட்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யாவின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருக்கின்றது. இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

அதே சமயம் வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் ரிலீஸ் என்று இருந்த நிலையில் இப்போது வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தைப் பற்றிய சில தகவல்களை படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறி வருகிறார்.

முதலில் வேட்டையன் திரைப்படமும் கங்குவா திரைப்படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. அந்த முடிவை எப்படி எடுத்தீர்கள் என்ற கேள்வி ஞானவேல் ராஜாவிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் வேட்டையன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது தீபாவளிக்கு தான் ரிலீஸ் என எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

அக்டோபர் 10ஆம் தேதி எந்த படமும் வெளிவராததால் அந்த தேதியை நாங்கள் தேர்வு செய்தோம். அதுமட்டுமல்லாமல் ரஜினியின் தீவிர ரசிகன் நான். அப்படி இருக்கும்போது ரஜினி படத்தோடு என் படத்தை எப்படி மோத விடுவேன் என்ற ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அது மட்டும் அல்லாமல் கங்குவா திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இந்த கதையை எழுதும்போதே இரண்டு பாகங்களாக எழுதி விட்டார்களாம். இப்போது கங்குவா படத்தின் முதல் பாகம் தான் வெளியாக இருக்கின்றதாம். அடுத்து 2025 ஆம் ஆண்டு இறுதியில் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2027 ஆம் வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகலாம் என்றும் ஞானவேல் ராஜா ஒரு சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் சூர்யா ஹிந்திலும் பிசியாக இருக்கிறார். இப்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவருடைய 44வது படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட 185 நாட்கள் என்று சொல்லப்படுகிறது.

Next Story