Categories: Cinema News

அந்த படம் முடிஞ்சதும் பாகுபலி 3!.. ஞானவேல் ராஜா கொடுத்த செம அப்டேட்!…

Baahubali 3: ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்தியராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம்தான் பாகுபலி மற்றும் பாகுபலி 2. தெலுங்கில் இதுவரை இப்படி ஒரு திரைபப்டம் உருவானதில்லை என சொல்லுமளவுக்கு இப்படத்தை செதுக்கியிருந்தார் ராஜமவுலி.

தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஹிந்தி பேசும் வட மாநிலங்களிலும் இப்படம் வசூலை அள்ளியது. ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

பாகுபலியை விட பாகுபலி 2 திரைப்படம் அதிக வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பின்னரே பேன் இண்டியா படங்கள் உருவாக துவங்கியது. கேஜிஎப், காந்தாரா, புஷ்பா படங்களும் எல்லா மொழியிலும் ஓடியது. இப்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. விரைவில் கேஜிஎப் 3 படமும் உருவாகும் என கணிக்கப்படுகிறது.

பாகுபலி 2 படத்திற்கு பின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை இயக்கினார் ராஜமவுலி. இந்த படத்தில் ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தனர். இந்த படமும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இடம் பெற்ற நாட்டுக்குத்து பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

தெலுங்கில் ஆஸ்கர் விருது வாங்கிய முதல் படமாக ஆர்.ஆர்.ஆர். படம் அமைந்தது. ஒருபக்கம், பாகுபலி 3 படம் வருமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்த கேள்வி பலமுறை ராஜமவுலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு மழுப்பலாகவே பதில் சொன்னார் ராஜமவுலி.

இந்நிலையில், பாகுபலி படத்தை தமிழில் வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ பாகுபலி 3 எடுக்கும் எண்ணம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு இருக்கிறது. ராஜமவுலி இப்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். அதுமுடிந்த பின் பாகுலை 3 உருவாக வாய்ப்பிருக்கிறது’ என சொல்லி இருக்கிறார்.

Published by
ராம் சுதன்