பிரகாஷ்ராஜ், சிம்ரன் 5 லட்சம் ஃபைன் கட்டி வெளியே வந்தாங்க!.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்..
இன்று சென்னையில் அசோக் செல்வன் நடித்த எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டு நடந்தது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் ஹீரோவான அசோக் செல்வனே விழாவில் கலந்து கொள்ளவில்லையாம். இதனால் கடுப்பான படத்தின் தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வனை நார் நாராக கிழித்து தொங்கவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் படம் முடிந்து டப்பிங் பேச அழைத்தாலும் மீதி பணத்தை கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேச வருவேன் என கறாராக சொல்லிவிட்டாராம் அசோக் செல்வன். திருமணத்திற்கு பிறகு அவருடைய அப்பா அம்மாவுக்கு புதிய காரை வாங்கிக் கொடுத்தாரே? அது யாரோட பணத்தில் இருந்து வந்தது என நினைத்தீர்கள்? எல்லாம் தயாரிப்பாளர் கொடுத்த பணத்தில் இருந்து வந்ததுதான் என திருமலை கூறினார்.
மேலும் பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் ரஜினி, கமல், தனுஷ் இவர்கள் எல்லாரும் அவரவர் படங்களை புரோமோட் செய்ய ஆங்காங்கே சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவருக்கு என்ன வந்தது? என கோபமாக கேள்விகளை கேட்டார்.
இதற்கு இடையில் கே. ராஜன் எப்போதும் போல தனது சூறாவளி பேச்சால் பேச்சை தொடங்கினார். நடிகர்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்து அவர்கள் உபயோகப்படுத்தும் கேரவன், போக்குவரத்து செலவு, சாப்பாடு என எல்லாமே தயாரிப்பாளர்களின் பணத்தில்தான். ஆனால் அந்தப் படத்தை ப்ரோமோட் செய்ய மட்டும் வரமாட்டேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என கேட்டிருக்கிறார்.
மேலும் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கொஞ்சம் கண்டிப்பு இருக்க வேண்டும் என கூறிய கே.ராஜன் உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறினார். தெலுங்கில் பிரகாஷ் ராஜ் மற்றும் சிம்ரன் ஒரு படத்தில் நடிக்க வேண்டியது இருந்ததாம். அதற்கான அட்வான்ஸ் தொகையும் வாங்கி விட்டார்களாம். ஆனால் திடீரென வேறொரு சில படங்களில் கமிட் ஆனதால் இந்தப் படத்தில் அவர்கள் நடிக்க காலதாமதம் ஆனதாம்.
இதை தயாரிப்பு கவுன்சிலிடம் புகார் செய்ய இருவருக்கும் சுமார் ஒரு மாதத்திற்கு ரெட் கார்டு போடப்பட்டதாம். அதுமட்டுமில்லாமல் ஆளுக்கு 5 லட்சம் அபராதமும் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே இருவரும் 5 லட்சம் அபராதத்தை கட்டிய பிறகே அந்த ரெட் கார்டு தளர்த்தப்பட்டதாக கே .ராஜன் கூறினார். இப்படி நம் கோலிவுட்டில் ஒரு மூன்று மாதத்திற்கு யாரையும் நடிக்க அழைக்காதீர்கள். மேக்கப் போடாமல் அவர்கள் முகம் வறட்சியாகட்டும். அப்போதுதான் நம்மை தேடி தானாக வருவார்கள் என கே.ராஜன் கூறினார்.