சீன் போடாத!.. லேடி சூப்பர்ஸ்டாருன்னு யாரும் கூப்பிடல!.. நயன்தாராவை சீண்டிய தயாரிப்பாளர்!

by sankaran v |
சீன் போடாத!.. லேடி சூப்பர்ஸ்டாருன்னு யாரும் கூப்பிடல!.. நயன்தாராவை சீண்டிய தயாரிப்பாளர்!
X

நயன்தாரா தன்னை யாரும் இனி லேடி சூப்பர்ஸ்டார்னு கூப்பிடாதீங்கன்னு சொல்லிருக்காங்க. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

யார் கூப்பிட்டா?: லேடி சூப்பர்ஸ்டார்னு இந்த அம்மாவை இதுவரைக்கும் யார் கூப்பிட்டா? அஜீத் போனா 'தல தல'ன்னு கத்துவாங்க. விஜய் போனா தளபதி தளபதின்னு கத்துவாங்க. ரஜினி போனா சூப்பர்ஸ்டார்னு கூப்பிடுவாங்க. கமல் போனா உலகநாயகன், விண்வெளி நாயகன்னு கத்துவாங்க. சிம்பு போனா லிட்டில் சூப்பர்ஸ்டார்னு கூப்பிடுவாங்க. தனுஷ் போனாகூட அல்டிமேட் சூப்பர்ஸ்டார்னு கூப்பிடுவாங்க.

அண்ணாத்த: ரசிகர்கள் ஒரு பிரியத்தால இப்படி எல்லாம் கூப்பிடுறாங்க. ஆடியன்ஸ் கூப்பிடுறதுதான் உண்மையான பட்டம். பல இடங்கள்ல நாம பட்டத்தைத் துறக்கணும்னு சொல்றோம். இந்த இடத்துல நயன்தாரா பட்டத்தைத் துறந்து இருக்குறது வேடிக்கையா இருக்கு. யாருமே அவரை லேடி சூப்பர்ஸ்டார்னு சொல்லல. கொண்டாடவும் இல்ல. கூப்பிடவும் இல்ல.

அவங்க எல்லா தயாரிப்பாளர்களும் வரும்போது என்னை வந்து லேடி சூப்பர்ஸ்டார்னு போடணும்னு அக்ரீமெண்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துக்குக் கூட லேடி சூப்பர்ஸ்டார்னு போடணும்னு அழுத்துனாங்க. சன் பிக்சர்ஸ்கிட்ட அது ஒர்க் ஆகல. அப்புறம் டைரக்டர் சிறுத்தை சிவா கிட்ட சொன்னாங்க.

லேடி சூப்பர்ஸ்டார் ரஜினி அனுமதி: நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அழுத்தம் கொடுத்துட்டாங்க. அதனால அவரைக் கதையைப் பற்றியே யோசிக்கவிடல. கடைசில வேற வழியே இல்லாம லேடி சூப்பர்ஸ்டார்னு போட்டுட்டாங்க. ரஜினிகிட்ட அனுமதி கேட்டுத்தான் போட்டாங்க. அவரும் சரின்னுட்டாரு. அவரு இதெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாரு. 75 வயசுல இப்பவும் ஸ்டைலா ரஜினி நடிக்கிறாரு. இதே மாதிரி 75 வயசுல நயன்தாரா நடிக்கச் சொல்லுங்க. லேடி சூப்பர்ஸ்டாருன்னு கூப்பிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத், கமல்: சமீபத்தில் அஜீத் தன்னை யாரும் தல, கடவுளேன்னு கூப்பிட வேண்டாம்னு பட்டத்தைத் துறந்தார். அதே போல கமலும் எனக்கு உலகநாயகன் உள்பட எந்தப் பட்டமும் தேவையில்லைன்னு சொன்னாரு. தொடர்ந்து இப்போ நயன்தாராவும் இப்படி சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story