Categories: latest news

சீன் போடாத!.. லேடி சூப்பர்ஸ்டாருன்னு யாரும் கூப்பிடல!.. நயன்தாராவை சீண்டிய தயாரிப்பாளர்!

நயன்தாரா தன்னை யாரும் இனி லேடி சூப்பர்ஸ்டார்னு கூப்பிடாதீங்கன்னு சொல்லிருக்காங்க. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

யார் கூப்பிட்டா?: லேடி சூப்பர்ஸ்டார்னு இந்த அம்மாவை இதுவரைக்கும் யார் கூப்பிட்டா? அஜீத் போனா ‘தல தல’ன்னு கத்துவாங்க. விஜய் போனா தளபதி தளபதின்னு கத்துவாங்க. ரஜினி போனா சூப்பர்ஸ்டார்னு கூப்பிடுவாங்க. கமல் போனா உலகநாயகன், விண்வெளி நாயகன்னு கத்துவாங்க. சிம்பு போனா லிட்டில் சூப்பர்ஸ்டார்னு கூப்பிடுவாங்க. தனுஷ் போனாகூட அல்டிமேட் சூப்பர்ஸ்டார்னு கூப்பிடுவாங்க.

அண்ணாத்த: ரசிகர்கள் ஒரு பிரியத்தால இப்படி எல்லாம் கூப்பிடுறாங்க. ஆடியன்ஸ் கூப்பிடுறதுதான் உண்மையான பட்டம். பல இடங்கள்ல நாம பட்டத்தைத் துறக்கணும்னு சொல்றோம். இந்த இடத்துல நயன்தாரா பட்டத்தைத் துறந்து இருக்குறது வேடிக்கையா இருக்கு. யாருமே அவரை லேடி சூப்பர்ஸ்டார்னு சொல்லல. கொண்டாடவும் இல்ல. கூப்பிடவும் இல்ல.

அவங்க எல்லா தயாரிப்பாளர்களும் வரும்போது என்னை வந்து லேடி சூப்பர்ஸ்டார்னு போடணும்னு அக்ரீமெண்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துக்குக் கூட லேடி சூப்பர்ஸ்டார்னு போடணும்னு அழுத்துனாங்க. சன் பிக்சர்ஸ்கிட்ட அது ஒர்க் ஆகல. அப்புறம் டைரக்டர் சிறுத்தை சிவா கிட்ட சொன்னாங்க.

லேடி சூப்பர்ஸ்டார் ரஜினி அனுமதி: நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அழுத்தம் கொடுத்துட்டாங்க. அதனால அவரைக் கதையைப் பற்றியே யோசிக்கவிடல. கடைசில வேற வழியே இல்லாம லேடி சூப்பர்ஸ்டார்னு போட்டுட்டாங்க. ரஜினிகிட்ட அனுமதி கேட்டுத்தான் போட்டாங்க. அவரும் சரின்னுட்டாரு. அவரு இதெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாரு. 75 வயசுல இப்பவும் ஸ்டைலா ரஜினி நடிக்கிறாரு. இதே மாதிரி 75 வயசுல நயன்தாரா நடிக்கச் சொல்லுங்க. லேடி சூப்பர்ஸ்டாருன்னு கூப்பிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத், கமல்: சமீபத்தில் அஜீத் தன்னை யாரும் தல, கடவுளேன்னு கூப்பிட வேண்டாம்னு பட்டத்தைத் துறந்தார். அதே போல கமலும் எனக்கு உலகநாயகன் உள்பட எந்தப் பட்டமும் தேவையில்லைன்னு சொன்னாரு. தொடர்ந்து இப்போ நயன்தாராவும் இப்படி சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago