எந்த நடிகரும் இத விட்டுக் கொடுக்க மாட்டாங்க! ஆனால் தனுஷ்? ‘ராயன்’ படத்திற்கு ப்ளஸே இதுதானாம்
தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனது 50வது படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருக்கிறார். படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது ஏஆர் ரஹ்மான் இசையில் அமைந்த பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி சம்பந்தப்பட்ட பாடல் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
பவர் பாண்டியன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷ் இயக்கும் படமாக இந்த ராயன் திரைப்படம் அமைந்திருக்கிறது. அதுவும் 50வது படம் எனும் போது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. பெரிய நடிகர்களை பொறுத்தவரைக்கும் அவர்களின் 25, 50, 75,100 வது படங்கள் பெரிய கண்டம் என்றே சொல்லலாம். இதில் தனுஷ் இரண்டு கண்டங்களை தாண்டி விட்டார்,
அதாவது அவருடைய 25வது படம் வேலையில்லாத பட்டதாரி பெரிய சூப்பர் ஹிட் படம். அதை போல் 50வது படமான ராயன் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே குலதெய்வ வழிபாடும் செய்திருந்தார் தனுஷ்.
அந்த வேண்டுதலும் நிறைவேறியது. இந்த நிலையில் ராயன் படத்தில் இருக்கும் சில நிறை குறைகளை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். முதலில் நிறையை கூறும் போது தனுஷ் இந்தப் படத்தை இயக்கி நடித்திருப்பதால் அவருடைய சீன்கள் எல்லாமே பெரிய பில்டப் எலலாம் இல்லை. பெரிய நடிகர்களின் படங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஏராளமான பில்டப் இருக்கும்.
ஆனால் தனுஷ் மிகவும் அடக்கமாகவே நடித்திருக்கிறார். அதற்கு பதிலாக அந்த பில்டப் காட்சிகளை தனக்கு தம்பிகளாக நடித்திருக்கும் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷனுக்கு கொடுத்திருக்கிறார். இந்த இடத்தில் வேறொரு நடிகர் இருந்திருந்தால் இப்படி விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள். இதுவே படத்திற்கு ஒரு ப்ளஸாக மாறியிருக்கிறது.
எந்த நடிகரும் இத விட்டுக் கொடுக்க மாட்டாங்க! ஆனால் தனுஷ்? ‘ராயன்’ படத்திற்கு ப்ளஸே இதுதானாம்குறை என்று பார்க்கும் போது ஆரம்பத்தில் இருந்தே தன் தம்பிகளுக்காகவே வாழும் தனுஷை ஒரு கட்டத்திற்கு மேலாக எதிர்க்கும் தம்பிகளாக காட்சி மாறுகிறது. இது கொஞ்சம் நம்ப முடியாத அளவில் இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.