படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் இருக்கும் போது இது எப்படி?!.. ராயனுக்கு வந்த சிக்கல்!...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ராயன். பவர் பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கி வெளிவந்திருக்கும் 2வது திரைப்படம் இது. அண்ணன் - தம்பி - தங்கை பாசத்தை மையமாக வைத்து அதில் கேங்ஸ்டர் கும்பலை நுழைத்து ஒரு படத்தி இயக்கி இருக்கிறார் தனுஷ்.
இந்த மாதம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளியானது. ஆனால், அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில்தான் ராயன் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனிஷின் தம்பிகளாக காளிதாஸ் ஜெயராமனும், சந்தீப் கிஷனும் நடித்திருக்கிறார்கள்.
தங்கையாக துஷரா விஜயனும் நடித்திருக்கிறார்கள். வில்லன்களாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சித்தப்பு சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார். எல்லோரையும் போட்டு தள்ள பார்க்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியானது.
ஆனால், படம் பார்த்த பலருக்கும் பிடிக்கவில்லை. அதற்கு காரணம், கதையிலும், கதாபாத்திரங்களிலும், காட்சி அமைப்பிலும் அழுத்தமோ, நம்பகத்தன்மையோ இல்லை. இதனாலேயே ரசிகர்களால் படத்தோடு ஒன்ற முடியாமல் போய்விட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த பின்னணி இசையை கொடுத்திருந்தாலும் அது படத்திற்கு உதவவில்லை.
ராயன் படத்தில் ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் இருக்கிறது. படம் முழுக்க ஒரு குத்தூசியை வைத்துக்கொண்டு குத்திக்கொண்டே இருக்கிறார் தனுஷ். இதனால்தான் இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்படத்தை பார்க்க கூடாது என்பதுதான் விதிமுறை.
ஆனால், சிதம்பரத்தில் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து சென்று ராயன் படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள் சில தனுஷ் ரசிகர்கள். இது தொடர்பான புகைப்படங்களும் நேற்று வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டும் பள்ளி சிறுவர்களை தியேட்டருக்கு அழைத்து போன தனுஷ் ரசிகர்கள், அதற்கு அனுமதி அளித்த பள்ளி நிர்வாகம் மற்றும் திரையரங்கம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.