Categories: latest news

படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் இருக்கும் போது இது எப்படி?!.. ராயனுக்கு வந்த சிக்கல்!…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ராயன். பவர் பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கி வெளிவந்திருக்கும் 2வது திரைப்படம் இது. அண்ணன் – தம்பி – தங்கை பாசத்தை மையமாக வைத்து அதில் கேங்ஸ்டர் கும்பலை நுழைத்து ஒரு படத்தி இயக்கி இருக்கிறார் தனுஷ்.

இந்த மாதம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளியானது. ஆனால், அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில்தான் ராயன் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனிஷின் தம்பிகளாக காளிதாஸ் ஜெயராமனும், சந்தீப் கிஷனும் நடித்திருக்கிறார்கள்.

தங்கையாக துஷரா விஜயனும் நடித்திருக்கிறார்கள். வில்லன்களாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சித்தப்பு சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார். எல்லோரையும் போட்டு தள்ள பார்க்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியானது.

ஆனால், படம் பார்த்த பலருக்கும் பிடிக்கவில்லை. அதற்கு காரணம், கதையிலும், கதாபாத்திரங்களிலும், காட்சி அமைப்பிலும் அழுத்தமோ, நம்பகத்தன்மையோ இல்லை. இதனாலேயே ரசிகர்களால் படத்தோடு ஒன்ற முடியாமல் போய்விட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த பின்னணி இசையை கொடுத்திருந்தாலும் அது படத்திற்கு உதவவில்லை.

ராயன் படத்தில் ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் இருக்கிறது. படம் முழுக்க ஒரு குத்தூசியை வைத்துக்கொண்டு குத்திக்கொண்டே இருக்கிறார் தனுஷ். இதனால்தான் இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்படத்தை பார்க்க கூடாது என்பதுதான் விதிமுறை.

ஆனால், சிதம்பரத்தில் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து சென்று ராயன் படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள் சில தனுஷ் ரசிகர்கள். இது தொடர்பான புகைப்படங்களும் நேற்று வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டும் பள்ளி சிறுவர்களை தியேட்டருக்கு அழைத்து போன தனுஷ் ரசிகர்கள், அதற்கு அனுமதி அளித்த பள்ளி நிர்வாகம் மற்றும் திரையரங்கம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

12 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

13 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

18 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

20 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

21 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

23 hours ago