ரஜினிக்கு பிரச்சினைனா நான் நடிக்கவே இல்ல! ‘முத்து’ படத்தில் இப்படியெல்லாம் நடந்ததா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ரஜினி சூப்பர் ஸ்டாராக அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராக இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தளவுக்கு அவருடைய நடிப்பில் குழந்தைகள் கவரும் வகையில் ஹியூமர், லூட்டி எல்லாமே அடங்கியிருக்கும். அதனால் தான் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இன்று வரை ரஜினியால் இந்த சினிமாவில் நிலைத்து நிற்க முடிகின்றது.

70 வயதை கடந்தாலும் இன்னும் அதே காமெடி கலந்து நடிப்பு இன்னும் அவரை விட்டு போகவில்லை. அதை தன் முகபாவனையில் தத்ரூபமாக காட்டுவார் ரஜினி. இந்த நிலையில் ரஜினியை பற்றி ராதாரவி கூறிய ஒரு விஷயம் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

அதாவது ரஜினியும் ராதாரவியும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் முத்துதிரைப்படம் பெரிய அளவில் இவர்கள் காம்போவிற்கு வரவேற்பு கிடைத்த திரைப்படமாக அமைந்தது. அந்தப் படத்தில் ரஜினி வேலையாளாகவும் ராதாரவி பெரிய எஜமானாகவும் நடித்திருப்பார்.

அப்போது ஒரு காட்சியில் ரஜினியை ராதாரவி வாடா போடா என கூறினாராம். உடனே ராதாரவியிடம் ‘ஏன் வாடா போடானு சொன்னீர்கள்’ என சுற்றி இருந்தவர்கள் கேட்டிருக்கின்றனர். அதற்கு ராதாரவி எனக்கு வேலையாளாக நடிக்கிறார் ரஜினி. அப்படித்தான் கூப்பிட முடியும் என்று சொல்லியிருக்கிறார்,

இருந்தாலும் மனசு கேட்காத ராதாரவி ரஜினியிடமே போய் ‘உங்கள வாடா போடானு சொல்றதுல எதுவும் பிரச்சினை இருக்கா’ என கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி அவருடைய பாணியிலேயே ‘இல்லயே. இல்ல’ என கூறியிருக்கிறார். இருந்தாலும் ராதாரவி இதை பற்றி ஒரு பேட்டியில் கூறும் போது சொன்னாலும் சொல்லியிருப்பார் ரஜினி என தெரிவித்தார்,

மேலும் ரஜினியிடம் ‘பிரச்சினைனா சொல்லுங்க. வேற யாரையாவது நடிக்க வைங்க. நான் விக், மீசை எல்லாம் எடுத்துவிடுகிறேன்’ என்று ராதாரவி கூறினாராம்.ஆனால் அதன் பிறகு எல்லாம் முடிந்து ராதாரவியே இந்த கேரக்டரில் நடித்துக் கொடுத்தார்.

Next Story