விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் தற்போது நடித்து ரிலீஸ்சுக்குத் தயாராக உள்ள படம் படைத்தலைவன். கடந்த 23ம் தேதி வெளியாவதாக இருந்த இந்தப் படத்திற்கு தியேட்டர் கிடைக்காததால் படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. அதே நேரம் படத்திற்கு பொருளாதார சிக்கலும் இருப்பதாகத் தெரிகிறது.
விஜயகாந்தைப் பொருத்தவரை தமிழ்த்திரை உலகில் எத்தனையோ நல்ல விஷயங்களைப் பண்ணி இருக்கிறார். அப்பேர்ப்பட்டவரின் மகன் நடிக்கும் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? இதைத் தீரப்பதற்கு யாருமே முன்வரவில்லையா என்று கேள்வி எழுகிறது. இது ஒரு புறம் இருக்க இப்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது. அது என்னன்னு பார்க்கலாமா…
விஜயகாந்த் மறைந்ததும் சண்முகப்பாண்டியன் படத்துல விஷால், ராகவா லாரன்ஸ் ஆகியோர் கெஸ்ட் ரோல்ல நடிச்சித் தர்றதா சொன்னாங்க. ஆனா அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை. இதுதான் விஜயகாந்துக்கு அவங்க பண்ற கைமாறான்னு ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இப்படி பதில் சொல்கிறார்.
உணர்ச்சிவசப்பட்டு அவங்க சண்முகப்பாண்டியன் படத்துல நடிக்கிறோம்னு சொன்னாலும் அவர்கள் அந்தப் படங்கள்ல நடிக்கிறதுல பல பிரச்சனைகள் இருக்கு. அந்தப் படத்திலே அவங்களுக்குத் தரப்படுகிற கதாபாத்திரம் அவர்களின் இன்றைய இமேஜிக்கு ஏற்ற மாதிரி அமையணும்.
அதுமாதிரி கதாபாத்திரத்தை உருவாக்கி விட்டு அவர்களைத் தொடர்பு கொண்டு இருந்தால் நிச்சயமாக அவர்கள் நடித்திருக்கக்கூடும். அதை எல்லாம் இவங்க முறையா செஞ்சாங்களான்னு தெரியல என்கிறார் சித்ரா லட்சுமணன்.
சண்முகப்பாண்டியன் படைத்தலைவன் படத்துக்காக 5 யானைகளுடன் பழகி மிகவும் கஷ்டப்பட்டு பல காட்சிகளில் நடித்துள்ளார். படத்தில் விஜயகாந்தை ஏஐயில் உருவாக்கி இருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு போதிய பப்ளிசிட்டி இல்லை என்பது குறையாக சொல்லப்படுகிறது. தற்போது சண்முகப்பாண்டியன் நடித்து வரும் படம் கொம்புசீவி.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…