கயாடு லோஹரை 2 வருஷம் சும்மா வீட்டில் உட்கார வச்ச லாரன்ஸ்!.. இதெல்லாம் நியாயமா!...

Kayadu Lohar: எப்போது டிராகன் படம் தொடர்பான அறிவிப்புகளும், அதில் கயாடு லோஹர் என்கிற ஒருவர் நடிக்கிறார் என போஸ்டர்கள் வெளியானதோ அப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் கயாடு லோஹர் பிரபலமாகிவிட்டார். டிராகன் படத்தின் புரமோஷன் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் வெளியானதிலிருந்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் கயாடு லோஹர்.
கயாடு லோஹர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். இப்போது புனேவில் வசித்து வருகிறார். டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் கன்னட மொழி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. 2021ம் வருடம் வெளிவந்த ஒரு படத்தில் நடித்தார்.
அதன்பின் மலையாளத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள Pathonpatham Noottandu என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு,மராத்தி என ஒரு ரவுண்டு வந்தார். இப்போது டிராகன் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகியிருக்கிறார். டிராகன் படம் வெளியானபோது டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எங்கு போனாலும் கயாடு லோஹர் படங்கள்தான் கண்ணில் பட்டது. விட்டால் தமிழ் சினிமா ரசிகர்கள் கயாடு லோஹருக்கு கோவில் கட்டினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்து நெகிழ்ந்து போய் நன்றி சொல்லி ஒரு வீடியோவையே வெளியிட்டார் கயாடு லோஹர். உண்மையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கவே கோலிவுட் பக்கம் வந்தார் கயாடு லோஹர். இந்த படத்தை லாரன்ஸே இயக்குவதாக இருந்தது. 2 வருடங்கள் வேறு எந்த தமிழ படத்திலும் நடிக்கக் கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டது.
கயாடு லோஹரும் அதில் கையெழுத்து போட்டார். ஆனால், லாரன்ஸோ படம் எடுக்கவில்லை. இடையில் வேறு படங்கள் வந்தாலும் நடிக்கக்கூடாது என கறாராக சொல்லிவிட்டார் லாரான்ஸ். தற்போது ஒப்பந்தம் முடிந்து 2 வருடங்கள் ஆகிவிட்டதால்தான் டிராகன் படத்திலும், அதர்வா முரளி நடித்துள்ள இதயம் முரளி படத்திலும் நடித்திருக்கிறார்.
ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ள கயாடு லோஹர் 2 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருப்பார். ஆனால், அதை தடுத்த பெருமை ராகவா லாரன்ஸ்க்கு உண்டு!.. இதெல்லாம் நியாயமா மாஸ்டர்?..