லட்சக்கணக்கில் சம்பளத்தை ஏத்திய ரஜினி! ஷாக் ஆன பாலசந்தர்.. அவர் கேட்ட வார்த்தை என்ன தெரியுமா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80களில் ஆரம்பித்த இவருடைய சினிமா பயணம் இன்று வரை 50 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இவருக்கு பொன்விழா எடுக்க வேண்டும் என திரையுலகில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

பெரிய அளவில் அந்த விழா எடுக்கப்பட வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பாலும் ஸ்டைலாலும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இவரை அறிமுகப்படுத்திய பெருமை கே. பாலச்சந்தரையே சேரும்.

அபூர்வ ராகங்கள் படத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியதன் மூலம் தொடர்ந்து பாலச்சந்தரின் பல படங்களில் நடிக்க வைத்தார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அதன் பிறகு பைரவி திரைப்படம் தான் ரஜினி ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம்.

அதில் இருந்து தொடர்ந்து ஹீரோவாக யாரும் அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தனக்கும் ரஜினிக்கும் இடையேயான ஒரு நட்பை பற்றி கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

அதாவது கே எஸ் ரவிக்குமாரிடம் ரஜினிகாந்த் 'என்னுடைய அடுத்த படத்தை பாலச்சந்தர் தான் தயாரிக்கிறார். அவரிடம் போய் கதை சொல்லுங்கள்' எனக் கூறினாராம். அப்போது பாலச்சந்தரிடம் முத்து கதையை சொல்லி இருக்கிறார் ரவிக்குமார்.

அந்த கதை அவருக்கு பிடித்துப் போக அதற்கு முன்பு ரஜினி ரவிக்குமாரிடம் 'எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்' என கேட்டாராம். அப்போது ரவிக்குமார் '12 லட்சம் வரை வாங்குகிறேன்' என கூறினாராம். நாட்டாமை பட சமயத்தில் 5 லட்சம் தான் வாங்கினாராம். இத்தனைக்கும் நாட்டாமை படம் ரவிக்குமாருக்கு பத்தாவது திரைப்படம். அப்படி இருக்கும்போதே ஐந்து லட்சம் தான் வாங்கினாராம்.

உடனே ரஜினி முத்து படத்திற்காக 15 லட்சம் என எழுதி கொடுத்து அனுப்பினாராம். பாலச்சந்தர் அதை வாங்கி பார்த்ததும் 'என்னடா பதினைந்து லட்சம் என எழுயிருக்கு. என் காலத்துல இவ்வளவு சம்பளத்தை வாங்கினதே இல்லையே. ஒரு லட்சம், ரெண்டு லட்சம் அஞ்சு லட்சம் வரை தான் வாங்கி இருக்கிறேன். இது என்ன உனக்கு 15 லட்சம் எழுதி இருக்கான் 'என ரஜினியை பற்றி பாலச்சந்தர் தன்னிடம் கேட்டதாக கேஎஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story