ரஜினி நடிப்பில் ரிலீஸாக உள்ள திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு பெரிய கேங்ஸ்டர் திரைப்படமாக கூலி திரைப்படம் உருவாகியிருக்கிறது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரஜினியின் நடிப்பில் கடைசியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ஜெயிலர்.
அந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 600 கோடிக்கும் மேலாக இந்தப் படம் வசூலை பெற்றது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வசூலை பெற்ற முதல் திரைப்படம் ஜெயிலர்தான். அடுத்து கூலி திரைப்படத்தையும் எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப கூலி படத்தை புரோமோட் செய்யும் வகையில் லோகேஷும் பல விஷயங்களை நேர்காணலில் பகிர்ந்து வருகிறார்.
அவரிடம் கூலி படம் 1000 கோடியை நெருங்குமா என்ற கேள்விக்கு ஒரு படத்தை எடுத்துவிட்டேன். அது 1000 கோடியை தொடுமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது. நல்ல படமாக வந்தால் அதுதான் எனக்கு சந்தோஷம் என்பது போல் பேட்டியில் கூறியிருந்தார். இன்னொரு பக்கம் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் காண ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகை சுருதிஹாசனும் அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் சென்னை காலிங் என்று பதிவிட்டிருந்தார். ஒரு வேளை ஆடியோ லாஞ்ச் சம்பந்தப்பட்ட கோடிங்காக இருக்கலாமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒரு ப்ரீ ரிலீஸ் ஈவண்டை படக்குழு நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம் .அதில் ரஜினியும் வந்து பேச இருக்கிறாராம். அதனால் அந்த விழாவில் ரஜினியின் 50 வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் ஏதாவது மரியாதை செய்யப்படுமா என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினிக்கு 50 வது ஆண்டு விழா எடுக்க வேண்டும் என கலைப்புலி தாணு நினைத்திருந்தார். அதோடு நடப்பு தயாரிப்பு கவுன்சிலும் எண்ணியிருந்தார்கள். ஆனால் ரஜினிதான் அதற்கு இடம் கொடுக்க வில்லை. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது ‘ஒரு வேளை ரஜினி தன்னை வைத்து சம்பாதித்து விடுவார்களோ என்று கூட எண்ணியிருக்கலாம். ’
‘ஏனெனில் அப்படி விழா எடுக்கும் பட்சத்தில் ஒரு டிக்கெட் இவ்வளவு ஆயிரம் என விற்கப்படும். இன்னொரு பக்கம் கடும் கூட்டமும் கூடிவிடும். அந்த கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மொத்த பெயரும் ரஜினி மேல்தான் விழும். அதனால் கூட ரஜினி இதை தவிர்த்திருக்கலாம்’ என அந்தணன் கூறினார்.
