கேரளாவிலிருந்து இயக்குனரை தூக்கிய ரஜினி!.. இன்னும் எவ்வளவு வச்சிருக்காரோ தெரியலயே!..
Rajinikanth: 70 வயது தாண்டிய பின்னர்தான் ரஜினி இன்னும் சுறுசுறுப்பாக சினிமாவில் இயங்கி வருகிறார். பாபா தோல்விக்கு பின் 4 வருடங்கள் கழித்து சந்திரமுகி படத்தில் நடித்த ரஜினி ஜெயிலர் ஹிட்டுக்கு பின் இன்னும் சுறுசுறுப்பாகி விட்டார். ஜெயிலர் வெளியான உடனேயே மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து கொடுத்தார்.
அது முடிந்தவுடன் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்கப்போனார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் என்கவுண்ட்டர் பற்றி விரிவாக பேசி இருக்கிறார்கள்.
ஏற்கனவே, இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வேட்டையன் படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜெயிலர் படத்தை விட இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருப்பது முன்பதிவிலேயே தெரியவந்திருக்கிறது.
எனவே, இந்த படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. வேட்டையன் படத்தை முடித்தவுடனேயே லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கப்போனார். இயக்குனர் லோகேஷ் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.
இந்த படத்தை முடித்தபின் நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2-வில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்நிலையில், இந்த படம் முடிந்தபின் மலையாளத்தில் வெளியான 2018 படத்தின் இயக்குனர் ஜூட் அந்தோணி ஜார்ஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் கதை சிம்புவுக்கு சொன்னதாக சொல்லப்பட்டது.
இதே இயக்குனர் சிம்புவுக்கு ஒரு கதை சொன்னது உண்மைதான். ஆனால், அது வேறு, ரஜினிக்கு சொன்ன கதை வேறு என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அனேகமாக அந்தோணி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்கிறார்கள். இந்த படத்தில் ரஜினி நடித்தால் மலையாள இயக்குனர் படத்தில் ரஜினி நடிப்பது இதுதான் முதல்முறையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.