Categories: latest news

ரஜினியை பழிதீர்த்த மழை… வேட்டையன் செய்த மோசமான சாதனை… தொடரும் அவலம்?!

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய படங்களின் வசூலில் மழையாக நடக்கும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பில் வரிசையாக படங்களில் நடித்துவருகிறார். அதிலும் அவருடைய கடைசி படமான வேட்டையனுக்கு முன்னர் ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூலை குவித்தது. பல வருடங்கள் கிடைத்த வெற்றி இது.

ஆனால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக சிக்கியது. அதுமட்டுமல்லாமல் ரஜினியின் பெயருக்காவது வசூல் செய்யும் என எதிர்பார்த்து இருந்த விநியோகிஸ்தர்களுக்கு பெரிய இடியாக மழை அமைந்தது.

அண்ணாத்த திரைப்படமும் மழையால் மக்கள் தியேட்டர் வர முடியாமல் போக முக்கிய இடமான சென்னையில் வசூல் பலமாக அடி வாங்கியது. தற்போது இதே நிலைமைக்கு வேட்டையனும் தள்ளப்பட்டு இருக்கிறது. ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ந் தேதி திரைக்கு வந்தது.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸான இப்படம் வசூலில் நான்கு நாட்களில் 125 கோடி ரூபாய் வசூல் செய்திருந்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக வேட்டையன் கோட் வசூலை முந்தும் என நினைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் மழையால் வேட்டையன் படத்துக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழையால் வசூல் பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறது. இதனால் மீண்டும் ரஜினியின் படத்துக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago