Categories: Cinema News latest news

அக்கோ பிக்கோ அமராவதி! கடைசில ரஜினியின் தேர்வு இப்படி ஆகிப் போச்சே

தற்போது ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு என ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அப்படியே இதில் தொடர்கிறார்கள்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய கேள்வி அனைவரும் மத்தியில் இருந்து வந்தது. ரஜினியின் அடுத்த படத்தை எச் வினோத் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதற்கான சந்திப்பை கூட எச் வினோத் ரஜினியுடன் நடத்தினார் என்றும் ஒரு தகவல் வெளியானது. எச் வினோத் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து போக கண்டிப்பாக படத்தை பண்ணலாம் என ரஜினி சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இப்போது வந்த தகவலின் படி ரஜினி இன்னொரு இயக்குனரிடமும் கதையைக் கேட்டதாக தெரிகிறது. தெலுங்கில் நானி நடிப்பில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான சரிபோதா சனிவாரம் படத்தின் இயக்குனர் விவேக்கிடம் கதை கேட்டிருக்கிறாராம் .ஒருவேளை அவர் சொல்லும் கதை பிடித்து விட்டால் எச் வினோத்துக்கு பதிலாக இயக்குனர் விவேக்குடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

nani

இன்னொரு பக்கம் வெற்றிமாறனும் ரஜினியை அடிக்கடி சந்தித்து வருகிறாராம் .மாரி செல்வராஜும் ரஜினியை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம். ஆனால் மாரி செல்வராஜ் சொன்ன கதையில் ரஜினிக்கு உடன்பாடே கிடையாது .இருந்தாலும் அவரை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மாரி செல்வராஜ் இருப்பதாக தெரிகிறது. ஆனால் ரஜினியின் இப்போதைய தேர்வு ஒரு பக்கம் எச் வினோத் இன்னொரு பக்கம் இயக்குனர் விவேக். இதில் யாரை ரஜினி தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
ராம் சுதன்