‘கூலி’ படத்தால் ஆசியாவிலேயே முதல் நடிகர் அந்தஸ்தை பெற்ற ரஜினி! என்ன மேட்டர் தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:36  )

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக தன் நடிப்பாலும் ஸ்டைலாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை கடந்த நடிகராக ரஜினி இருந்தாலும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுப்பவராகவே இருந்து வருகிறார்.

ரஜினியின் படங்களுக்கு சினிமாவில் நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வருகிறது. அவர் படங்கள் வெளியாவதன் மூலம்தான் திரையரங்கு உரிமையாளர்கள் நல்ல ஒரு லாபத்தை ஈட்ட முடிகிறது. இப்போது ரஜினி லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவரின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது.

தச ஞானவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் வேட்டையன் திரைப்படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் நடிப்பில் கடைசியில் வெளியான திரைப்படமான ஜெயிலர் வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதை தகர்த்தெறியும் படமாக கூலி படம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் சம்பளம் பற்றிய தகவல் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதாவது கூலி படத்திற்காக ரஜினி 280 கோடி சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக ரஜினி திகழ்கிறார்.

இதற்கு முன் ஜெயிலர் திரைப்படத்திற்காக ரஜினி வாங்கிய 250 கோடி சம்பளம் மற்றும் அமீர்கான் தங்கல் படத்திற்காக வாங்கிய 270 கோடி சம்பளம் இவற்றை முறியடித்து கூலி படத்திற்காக 280 கோடி சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்களில் இப்போது டாப்பில் இருப்பவர் ரஜினிகாந்த் தான்.

Next Story