Director Atlee: தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது.
அதிலும் நடிகர் விஜய் வைத்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை இயக்கியிருந்தார். இந்த மூன்றுமே ஹட்ரிக் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்த அட்லி பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஷாருக்கான், நயன்தாராவை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனால் பாலிவுட் சினிமாவிலும் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கின்றார் அட்லி. சமீபத்தில் இவர் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தை தயாரித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் சல்மான்கானை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது. முதலில் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த கமல்ஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை இப்படத்தில் நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
அதாவது சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்தை வைத்து டூயல் ஹீரோ சப்ஜெக்ட்டை அட்லி இயக்கப் போகின்றார் என்று கூறிவந்தனர், அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகின்றார் என்றும் தகவல் வெளியானது. ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.
இதற்கிடையில் மீண்டும் எப்படி இந்த திரைப்படத்தில் இணைவார் என்று கூறி வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவை சேர்ந்த சினிமா விமர்சகர்கள் கூறியிருந்ததாவது கடந்த சில நாட்களாக அட்லியின் அடுத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்தும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க இருப்பதாக கூறிவரும் தகவல் அனைத்துமே பொய். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே தனது லைன்அப்-பில் மிக பிஸியாக இருக்கும் சமயத்தில் ஹிந்தி பக்கம் தற்போது செல்வதற்கு வாய்ப்பில்லை.
அதுமட்டுமில்லாமல் ராஷ்மிகா இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதும் வதந்திதான். அட்லியின் மேனேஜரும் ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜரும் ஜெகதீஷ் என்பதால் ராஷ்மிகா அட்லி படத்தில் நடிக்கின்றார் என்று கிளப்பி விட்டிருக்கிறார்கள். இது எதுவுமே உண்மை கிடையாது. ஆனால் அட்லி சல்மான் கானை வைத்து திரைப்படத்தை இயக்குகின்றார் என்பது உண்மை என்று தெரிவித்திருக்கிறார்கள்.
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…