ரஜினிகாந்துடன் இணையும் உச்ச நடிகர்?.. அட்லியின் புதிய படத்தில் சூப்பர் ட்விஸ்ட்!

Atlee: அட்லீயின் இயக்கத்தில் உருவாக இருக்கும் 6வது திரைப்படம் குறித்த ஆச்சரிய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார். படம் மிகப்பெரிய அளவில் விமர்சனம் குவித்தாலும் வசூல் ரீதியா வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஜவான் திரைப்படத்தினை இயக்கினார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் படம் மிகப்பெரிய வசூல் குவித்தது. இதையடுத்து அவருடைய ஆறாவது படம் குறித்த அப்டேட் கசிய தொடங்கி உள்ளது.
அந்த வகையில் முதலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் அட்லீயின் 6வது படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படம் பட்ஜெட் பிரச்சனைகளால் கைவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு சவுத் இந்தியா பிரபலத்தினை நடிக்க கேட்டு இருக்கிறார் சல்மான் கான்.
ஆனால், அந்த நடிகர் சல்மான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்பதால் யாரும் நடிக்காமல் போக படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கைப்பற்றி, அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயுடன் இணைந்து ஒரு பெரிய பட்ஜெட் படமாக உருவாக்க முடிவு செய்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பே அட்லீ, அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒப்பந்தம் செய்த இந்த படத்தில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், சிவகார்த்திகேயனும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங் முடிந்த கையோடு, அட்லீயின் ஏ6 படத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக இணைய இருக்கிறார்.
இதன் மூலம், அட்லீயின் இப்படம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஏற்கனவே அடுத்த தலைமுறையின் சூப்பர் ஹீரோவாக எஸ்கே மாறி இருக்கும் நிலையில் இந்த படம் நடந்தால் அவர் கேரியர் பெரிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அல்லு அர்ஜுன், சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் இணையும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகில், ஜவான் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, இப்போது தென்னிந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்களை ஒன்றாகக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார்.
சூப்பர் காம்பினேஷனில் உருவாகும் ஏ6 படம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அட்லீக்கு 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.