ரஜினி, அஜித் ரசிகர்கள் ஃபுல் வைப்ல இருக்காங்க!.. இன்னைக்கு டிரெண்டிங் கிங் யாருன்னு பார்த்திடலாம்!..

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று ஏகப்பட்ட சினிமா அப்டேட்கள் வரிசை கட்டிக் காத்திருக்கின்றன. ஏற்கனவே திரையரங்குகளில் எட்டுக்கும் மேற்பட்ட படங்கள் இன்று வெளியாகின்றன. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட ரீ ரிலீஸ் படங்களும் வெள்ளிக்கிழமை வெளியீடாக வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்தின் கூலி படத்தின் அப்டேட் மற்றும் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் உள்ளிட்டவை வெளியாகப்போகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் முன்னிட்டு ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா என்கிற கேள்விகளை ரஜினிகாந்த் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
அமீர்கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் என்பதால் கண்டிப்பாக கூலி படத்தில் இருந்து இன்று வெயிட்டான சம்பவம் கிடைக்கும் என காலை முதலே ட்விட்டர் ட்ரெண்டிங்கை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் அஜித் ரசிகர்களும் குட் பேட் அக்லி படத்தின் ட்ரெண்டிங்கை ட்விட்டரில் அதகளப்படுத்தி வருகின்றனர். அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே சோசியல் மீடியா கிங் யார் என்கிற போட்டி இன்று நிலவி வருகிறது.
ஆனால், அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிரிகளாக சண்டை போடாமல் மியூச்சுவல் ஃபேன்ஸாக இருக்கும் நிலையில், இரண்டு தரப்புக்கும் இன்று செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில் அனிருத் குரலில் ரெட் டிராகன் பாடல் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ள.