போடு... போடு.. கூலி படத்தில் இந்த நடிகர் கன்பார்ம்... அதிரும் கோலிவுட்..
Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் கூலி திரைப்படத்தில் இணைய இருக்கும் பிரபலம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தினை அனிருத் இசையமைப்பு செய்ய இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்துள்ளது.
இப்படத்தில் ரஜினிகாந்த், செளபீன் ஷாகீர், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் போல இதுவும் மல்ட்டி ஸ்டார் படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வர ரஜினிகாந்திற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போல்லோ மருத்துவமனையில் ரஜினியின் இருதயத்தில் ஸ்டண்ட் வைத்து சின்ன சர்ஜரி ஒன்று நடந்தது. இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வரும் அக்டோபர் 16ந் தேதி முதல் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் வெளிநாடுகளில் திட்டமிடப்பட்டு இருந்த ஷூட்டிங் ரஜினியின் உடல்நிலை காரணமாக சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கூலி திரைப்படத்தில் அமீர்கான் ஸ்பெஷல் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.