கூலி படத்துக்கு போட்டா போட்டி… ஓடிடிக்கு மட்டும் இத்தனை கோடியாம்?
Coolie: ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்காக பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், அதன் விற்பனை விலை எக்கச்சக்கமாக எகிறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் செளபின் ஷாபீர், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடந்து வந்தது.
லோகேஷ் கனகராஜ் மற்ற படங்களை போல அல்லாமல் இப்படம் வித்தியாசமான கதையை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் கீழ் இந்த படம் வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷின் தனிப்படமாகவே கூலி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பாடல் அளவிலும் கூலி திரைப்படத்தில் பெரிய ஹிட் கொடுக்கும் என நம்பிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் மற்ற காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சிறிது கால ஓய்விற்கும் பின்னர் இந்த மாத கடைசியில் இருந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கூலி திரைப்படத்தின் ஓடிடி விற்பனைக்கு தற்போது போட்டி தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் 175 கோடி வரை வியாபாரம் நடக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுகிறது. அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்போட்டியில் இருக்கின்றனர். இந்த தொகை உறுதியானால் இதுதான் அதிகபட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.