நின்னு பேசக்கூட உடம்புல தெம்பில்ல!.. ரஜினி பத்தி எனக்கு தெரியும்… பொளந்து கட்டிய பிரபலம்

by ராம் சுதன் |

Rajinikanth: நடிகர்கள் மீதான விமர்சனங்கள் எப்போதும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்தை பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் விமர்சித்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு சினிமா கல்லூரியில் பயில வந்தவர். படிப்பில் படு சுட்டியாக இருந்தவருக்கு கே.பாலசந்தர் மூலம் நடிப்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து வில்லனாக வந்தாலும் நடிப்பில் தனி கவனம் செலுத்தி வந்தார். ஹீரோவாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய ஆட்சியை பிடிக்க தொடங்கி வந்தார். இதையடுத்து சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்று தமிழிலில் வெற்றி கொடி காட்டினார்.

90களில் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். ஒவ்வொரு முறை அவர் ரசிகர்கள் கூட்டம் வைத்த போது இந்த முறை அரசியல் அறிவிப்பு வந்துவிடும் என எதிர்பார்த்தனர்.

இதையடுத்து அவருக்கு முன் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவிக்க ரஜினிகாந்தும் அரசியலுக்கு வர இருப்பதை அறிவித்தார். ஸ்ட்டம் சரியில்லை என ரஜினிகாந்த் பேசினார். அந்த நேரத்தில் அவர் மீது பல பிரபலங்கள் கோபமாக விமர்சனங்களை கொட்டி வந்தனர்.

அதில் பிரபல நடிகரும், இயக்குனருமான ஆர்.சுந்தராஜன் தன்னுடைய பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் ஒரே ஒரு எம்ஜிஆர் தான். அந்த இடத்துக்கெல்லாம் நீங்க போகவே முடியாது. செக் போஸ்ட்டிலே காலி ஆகிடுவீங்க. அவர் கட்சியை ஆரம்பித்து கோயமுத்தூர் மீட்டிங் போட்டு திருப்பூர் வரும் போதே செத்து போய்டுவாரு.

அவரு தான் அவரோட உடம்பு கண்டிஷன். நான் அவரிடம் வேலை வாங்குனேன். நின்னு பேசக்கூடா அவருக்கு உரிமை இல்லாதவர். தமிழ்நாட்டை பத்தி பேச அவருக்கு அருகதையெல்லாம் இல்ல. அவர் கேபசிட்டி எனக்கு என்னென்னு தெரியும் என ஆர்.சுந்தராஜான் காரசாரமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ஆனாலும், கட்சி பெயர் அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற திடீர் அறிவிப்பே வந்தது. இருந்தும் பிரபலங்கள் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் குறித்து பேசும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Next Story