இந்த படத்தை எடுக்கணுமா?.. குழப்பத்தில் இருந்த ரஜினிகாந்த்.. நெல்சன் கொடுத்த நம்பிக்கை!..

நடிகர் ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். இளம் இயக்குனர்களுடன் இணைந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். இவருடன் நடித்தவர்கள் எல்லாம் தற்போது அப்பா, தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் மட்டும் தற்போது வரை ஹீரோவாக நடித்த அசத்தி வருகின்றார்.
வேட்டையன் திரைப்படம்:
நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் எல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனால் படத்தின் வசூலிலும் பெரியளவு சாதனை படைக்கவில்லை. சுமாரான திரைப்படமாக தான் வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு அமைந்தது. இதனால் அடுத்த திரைப்படம் வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் நடித்து வருகின்றார்.
ரஜினிகாந்த் லைன்அப்:
தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடைய இருக்கின்றது. அடுத்த வருடம் மே மாதம் இப்படத்தின் ரிலீஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
வேட்டையன் திரைப்படத்திற்கு முன்னதாக வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு சிறந்த கம்பேக் படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்தது. கூலி திரைப்படத்தை முடித்த கையோடு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார்.
ஜெயிலர் 2 வேண்டுமா?
ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவதற்கு இயக்குனர் நெல்சன் முடிவு செய்திருந்தார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதில் விருப்பம் இல்லையாம். ஏனென்றால் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
அது மட்டும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்த நிலையில் அதன் இரண்டாவது பாகமான 2.0 மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்தின் கதையை கூறி நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கின்றார்.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை ரஜினிகாந்த் அவர்களுக்கு வந்த பிறகுதான் இப்படத்தில் நடிப்பதற்கு ஓகே கூறி இருக்கின்றார். வருகிற டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.