அருணாச்சலம் படத்தில் நடந்த கூத்து... இயக்குனர்களை கூப்பிட்டு வச்ச அசிங்கப்படுத்திய ரஜினி..!
தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 73 வயதான போதிலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனை தவிர இவருடன் நடித்து வந்த நடிகர்கள் பலரும் தற்போது அப்பா, தாத்தா உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இவர் மட்டும் தற்போது வரை ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார்.
கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்னர் தமிழில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம் என்றால் அது பைரவி தான்.
1978 ஆம் ஆண்டு எம் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பைரவி. இப்படம் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த். அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இப்படி சினிமாவில் பிஸியான நடிகராக நடித்து வந்தபோது அருணாச்சலம் என்கின்ற திரைப்படத்தை எடுத்து வந்தார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தனக்கு சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் உதவி செய்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பலருக்கும் படத்தின் லாபத்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி அவர் பல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்து பேசி வந்தார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்த பைரவி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாஸ்கரையும் அவர் அழைத்து பேசியிருக்கின்றார். இதை கேட்ட பாஸ்கர் மிக அதிர்ச்சி அடைந்து நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அருணாச்சலம் திரைப்படத்தில் தனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து அந்த வேலை செய்த பிறகு எனக்கு அதில் ஒரு பங்கு கொடுக்கிறீர்கள் என்றால் அது நியாயமாக இருக்கும்.
அதை விட்டுவிட்டு நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஏதோ இலவசமாக கொடுப்பது போல் தோன்றுகின்றது. தற்போது வரை நான் உங்களிடம் எதற்காகவும் உதவி வேண்டும் என்று கேட்டு நின்றது கிடையாது. அப்படி இருக்கையில் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தது என் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது என கூறி இருக்கின்றார். இயக்குனர் பாஸ்கர் மட்டும் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்தை வைத்து பல படங்களை இயக்கிய ஸ்ரீதர் அவருக்கும் உதவி செய்வதாக கூறி அவரது வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கின்றார்.
இதை கேட்ட இயக்குனர் ஸ்ரீதர் இதே பதிலை அளித்திருக்கின்றார். அதன் பிறகு இயக்குனர் ஸ்ரீதர் இயக்குனர் பாஸ்கரிடம் போன் செய்து தன்னிடம் ரஜினிகாந்த் இப்படி பேசியதாகவும் அது எனக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்ததாக மனம் நொந்து பேசியதாக பாஸ்கர் அவர்களின் மகன் பாலாஜி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.
தன்னை வளர்த்து விட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை வாழ வைக்காமல் பணத்தை கொடுத்து இழிவு படுத்து இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த் என்று அவர் கூறியிருந்தார். இந்த சம்பவம் தனது தந்தைக்கும் மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்ததாக அந்த பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார்.