படையப்பா படத்தை காவு வாங்க நினைத்த ரஜினி... காப்பாத்திய கமல்ஹாசன்...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:30  )

Padaiyappa: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தினை காப்பாற்றியதே உலக நாயகன் கமல்ஹாசன் என இயக்குனர் கே.எஸ் ரவிகுமார் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1999ம் ஆண்டு ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், நாசர், செளந்தர்யா, லட்சுமி, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தினை கே.எஸ் ரவிக்குமார் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு செய்து இருந்தார்.

பொன்னியின் செல்வனின் நாவலில் ஒரு பகுதியை படமாக எடுக்க முடிவெடுத்தனர். அப்படத்திற்கு அறுபடையாப்பா என்பதனை குறிக்கும் விதமாக படையப்பா எனப் பெயர் வைத்தனர். அருணாச்சல சினி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்தது.

ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி ரோலில் நடிக்க முதலில் மீனா மற்றும் ரம்பாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. வசுந்தரா ரோலில் சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். ஆனால் அவரின் பிஸி செட்யூலால் அதுவும் நடக்காமல் போனது.

பலகட்ட பேச்சுவார்த்தை முடிந்து படத்தின் ஷூட்டிங்கை படக்குழு வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறது. படத்தினை காண படக்குழுவுடன் ரஜினிகாந்த் உட்கார்ந்து இருக்கிறார்.

படம் மொத்தமாக 19 ரீல் இருந்ததாம். அதை 14 ரீல்லாக குறைக்க வேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்தை கேட்டு இருக்கிறார். ஆனால் சூப்பர்ஸ்டார் எல்லாமே நல்லா தானே இருக்கு. எதுக்கு குறைக்கணும் என்றாராம். படத்தை பார்க்கும் போது ரொம்ப நேரமாக படக்குழுவுக்கு குழப்பமாக இருக்கிறது. அதற்கு கேட்டால் ரஜினியா இந்தி படம் ஒன்றில் இரண்டு இடைவேளை விட்டு இருக்கின்றனர். நாமும் ரெண்டு விட்டுக்கலாம் என்றாராம்.

இருந்தும் தன்னுடைய நண்பர் கமல்ஹாசனுக்கு கால் செய்து 19 ரீல் இருக்கு ரெண்டு இடைவேளை விடலாம் என நினைக்கிறேன். ஆனால் இயக்குனர் சந்தேகமாக இருக்கிறார் எனக் கேட்டு இருக்கிறார். கமல்ஹாசன் பைத்தியமா உனக்கு. அதெல்லாம் இந்திக்கு தான் செட்டாகும். இயக்குனரை நம்பு அவரிடம் 14 ரீல் குறைத்து கொடுக்க சொல்லு என அறிவுரை செய்தாராம். அதை தொடர்ந்தே படையப்பா படம் தற்போதைய வடிவில் ரிலீஸ் ஆனதாம்.

Next Story