சீன் போட்ட சிவகார்த்திகேயன்!.. வெங்கட்பிரபுவுக்கு அடித்த ஜாக்பட்!.. அடுத்து ரஜினி படமா?!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:14  )

Venkat prabu rajini: சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் வெங்கட்பிரபு. காதல், காமெடி, நட்பு, கிரிக்கெட் இது எல்லாம் வெங்கட்பிரபு படத்தில் இருக்கும். நண்பர்களை வைத்துக்கொண்டு மிகவும் ஜாலியாக படமெடுப்பார். துவக்கத்தில் பிரேம்ஜி. ஜெய், அர்விந்த் ஆகாஷ், வைபவ் உள்ளிட்ட சிலரை வைத்துக்கொண்டு படங்களை இயக்கினார்.

இப்போதும், இவர்களில் பலரும் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் வந்து போவார்கள். சென்னை 28 படத்திற்கு பின் சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் பார்வை வெங்கட்பிரபு மீது பட்டது.

எனவே, மாஸ், பிரியாணி ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், அது ஓடவில்லை. சில வருடங்கள் கழித்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை கொடுத்தார். டைம் லூப்பை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

அதன்பின் சில படங்கள் இயக்கினார். ஆனால், தேறவில்லை. வெங்கட்பிரபு சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போக கோட் படம் உருவானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இந்த படம் உருவானபோதே சிவகார்த்திகேயனிடம் ஒரு கதை சொல்லி ஓகே செய்து வைத்திருந்தார்.

அதற்காக கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு செல்வது போலவும் ஒரு காட்சியை வைத்தார். சிவகார்த்திகேயன் அமரன் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், அடுத்து அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிறைய படங்கள் கையில் இருப்பதை காட்டி அந்த பிராஜெக்ட்டை தள்ளி வைத்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், வெங்கட்பிரபுவுக்கு ரஜினி ஒரு படம் கொடுப்பார் என செய்திகள் உலா வருகிறது. வழக்கமாக விஜயை வைத்து ஹிட் கொடுக்கும் இயக்குனர்களுடன் ரஜினியும் ஒரு படம் செய்வார். பீஸ்ட் படத்திற்கு பின் நெல்சனை அழைத்து ஜெயிலர் கொடுத்தவர்தான் ரஜினி. எனவே, இது நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு, வெங்கட்பிரபுவுக்கு 3 ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ரஜினி, விஜய் அஜித்.. இதில் அஜித், விஜய் நடந்துவிட்ட நிலையில் ரஜினியை இயக்க கண்டிப்பாக அவர் முயற்சி எடுப்பார் என்றே நம்பலாம். அனேகமாக இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

ஏனெனில், ரஜினியை வைத்து லைக்கா தயாரித்த தர்பார், லால் சலாம் ஆகிய படங்களில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. வேட்டையன் படமும் மெகா வெற்றி இல்லை. எனவே, தங்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுங்கள் என ரஜினியிடம் லைக்கா கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story