Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை குவித்து இருக்கிறது. இதன் காரணம் குறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
லைக்கா நிறுவனம் தயாரித்த ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வேட்டையன். இப்படத்தினை த.செ ஞானவேல் இயக்கி இருந்தார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படத்தின் பாடல்கள் எப்போதும் போல குறையில்லாமல் சூப்பர்ஹிட் அடித்தது.
படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் முதல் அறிவிப்பு முதல் டிரைலர் வரையே ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இருந்தும் ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் பயம் இருந்ததும் உண்மைதான்.
ஜெய் பீம் போன்ற கருத்து திரைப்படத்தை கொடுக்க ஞானவேலால் ரஜினியின் மாஸை ரசிகர்களிடம் சரியாக கடத்த முடியுமா என பல கேள்விகள் இருந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினிகாந்த் த.செ.ஞானவேலுவுடன் முதலில் படம் பண்ணுவதற்கு தயங்குவது போலவே தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டுகளை பெறவில்லை. எப்போதும் போல ரஜினிக்காக சென்ற கூட்டம் மட்டுமே வேட்டையன் திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் பொதுவாக ரஜினியின் திரைப்படங்களில் அவருக்கு பெரிய அளவிலான மாஸ் காட்சிகள் இருக்கும்.
அதுவே படத்தில் பல இடத்தில் இல்லாமல் தான் இருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்து அந்தணன் கூறும்போது த.செ.ஞானவேல் இப்படத்திற்காக தயார் செய்து வைத்திருந்த கிளைமேக்ஸ் வேறு. ஆனால் ரஜினிகாந்த் தன்னால் அந்த கிளைமாக்ஸ் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார்கள்.
அவர் சொன்னபடி தான் கிளைமாக்ஸ் தற்போது இருக்கும் படத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் இப்படத்தில் வித்தியாசமாக பல காட்சிகளின் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் த.செ ஞானவேலுவிற்கு படப்பிடிப்பில் மன கஷ்டம் நிறைய இடத்திலும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.வ்
